SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தின் ‘தங்க மகன்’ மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது: ரோகித் ஷர்மா, மணிகா பத்ரா, வினேஷ்போகத், ராணியும் தேர்வு: 27 பேருக்கு அர்ஜுனா

2020-08-22@ 01:10:09

புதுடெல்லி: ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் நட்சத்திரம் கேப்டன் ரோகித் ஷர்மா உட்பட 5 பேர் விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது பெறுவோர் பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. 2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியின் ஆண்கள் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரம் ரோகித் ஷர்மா,

டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய ஹாக்கி அணி வீராங்கனை ராணி ஆகிய 5 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா உட்பட 27 வீரர், வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெற உள்ளனர். இது தவிர துரோணாச்சார்யா, தியான்சந்த், டென்சிங் நார்கே விருதுகளுக்கான பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனா விருது பெறுவோர் விவரம்
1    அடானு தாஸ்    வில்வித்தை
2    டூட்டீ சந்த்    தடகளம்
3    சாத்விக் சாய்ராஜ்    பேட்மின்டன்
4    சிராக் ரெட்டி    பேட்மின்டன்
5    விஷேஷ் பிரிகுவன்ஷி    கூடைப்பந்து
6    மணிஷ் கவுஷிக்    குத்துச்சண்டை
7    லவ்லினா போர்கோஹைன்    குத்துச்சண்டை
8    இஷாந்த் ஷர்மா    கிரிக்கெட்
9    தீப்தி ஷர்மா    கிரிக்கெட்
10    அஜய் அனந்த்    குதிரையேற்றம்
11    சந்தேஷ் ஜிங்கான்    கால்பந்து
12    அதிதி அஷோக்    கோல்ப்
13    ஆகாஷ்தீப் சிங்    ஹாக்கி
14    தீபிகா    ஹாக்கி
15    தீபக்    கபடி
16    சரிகா சுதாகர்    கோ கோ
17    தத்து பாபன்    துடுப்புப்படகு
18    மானு பேக்கர்    துப்பாக்கிசுடுதல்
19    சவுரவ் சவுதாரி    துப்பாக்கிசுடுதல்
20    மாதுரிகா பத்கர்    டேபிள் டென்னிஸ்
21    திவிஜ் ஷரண்    டென்னிஸ்
22    ஷிவ கேசவன்    குளிர்கால விளையாட்டு
23    திவ்யா கக்ரன்    மல்யுத்தம்
24    ராகுல் ஆவாரே    மல்யுத்தம்
25    சுயாஷ் நாராயண்    பாரா நீச்சல்
26    சந்தீப்    பாரா தடகளம்
27    மணிஷ் நர்வால்    பாரா ஷூட்டிங்

Like Us on Facebook Dinkaran Daily News
 • republic20222

  டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்