SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தடுப்பு மருந்து கிடைத்தால் நாட்டில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும்: ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு!

2020-08-19@ 14:38:38

கான்பெரா: கொரோனா தடுப்பு மருந்து கிடைத்தால் ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  உலகம் முழுவதும் பெரிதாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவதும் சோதனை அளவிலேயே இருக்கின்றன. ஆனால், ரஷ்யா மட்டுமே இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஸ்வீடிஷ்-பிரிடீஷ் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆஸ்திரேலிய அரசு ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.

ஸ்வீடிஷ்-பிரிடீஷ் மருந்து தயாரிக்கும் நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மருந்து தொடர்பான ஆய்வுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஒப்பந்தத்தின்படி, கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால், அது ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றியடைந்தால், நம் நாட்டிலே அந்த மருந்து தயாரிக்கப்படும். அரசின் கட்டுப்பாட்டில் மக்கள் அனைவருக்கும் இந்த மருந்து அளிக்கப்படும். ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டரை கோடி மக்களுக்கும் கட்டண வசூல் இல்லாமல் இந்த சேவை நடக்கும், எனக்கூறியுள்ளார்.  
 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்