மாலி நாட்டில் ராணுவ புரட்சி: கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் அதிபர் இப்ராஹிம் பவுபகர்.!!!!
2020-08-19@ 08:21:39

பமாகோ: மாலி நாட்டு அதிபர் இப்ராஹிம் பவுபகர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாலி மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு இதுவாகும். பிரெஞ்சு சூடான் என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு மாலிப் பேரரசின் நினைவாக மாலி என்ற பெயரைப் பெற்றது. இப்பெயர் நீர்யானையின் பம்பாரா மொழிப் பெயரடியில் இருந்து மருவியது. மாலியின் தலைநகரம் பமாக்கோ என்பது பம்பாரா மொழியில் 'முதலைகளின் இடம்' என்ற பொருள் கொண்டது.
இதற்கிடையே, மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் அருகே உள்ள காதி நகரத்தில் ராணுவத் தளம் அருகே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றதாக தெரிகிறது. ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்தன. இது ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான சதியாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், ராணுவ வீரர்களிடம் பிரதமர் பவ்பவ் சிஸ்சே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், மாலி நாட்டில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ புரட்சி ஏற்பட்டது. ராணுவ கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு நிர்வாகத்தையும் கைப்பற்றினர். அதிபர் இப்ராஹிம், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். நாடாளுமன்றத்தை பிரதமர் பவ் சிஸ்சே கலைத்தார்.
ஐ.நா வலியுறுத்தல்:
மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிபாக கவனித்து வருகிறது. முதலில் கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டுள்ள அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமரை எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அங்கு மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்
அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!