நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பேட்டி
2020-08-18@ 17:47:17

டெல்லி: நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 7 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக 876 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 51,797 உயர்ந்துள்ளது.
நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 27,02,742 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 71.91 ஆகும். இதுவரை மொத்தம் 19,77,779 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 6,73,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தாலும் தொற்றிலிருந்து குணமடைவோரிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 19.70 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
மேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி
தமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்
பிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..!!
அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!