SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கவலைக்கிடம்

2020-08-15@ 01:13:18

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ‘நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் குணமடைந்து வருவேன்’ என்று எஸ்.பி.பி வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தொடர்ந்து, அவர்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பியின் உடல் நிலையில் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அறிவித்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ‘எஸ்.பி.பியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவிக்கும் கொரோனா: எஸ்.பி.பியின் மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் எஸ்.பி.பி.சரண் கூறுகையில், ‘’எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அச்சப்பட தேவையில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தேறி வருகிறார்’’ என்று தெரிவித்தார்.  

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா
பருத்திவீரன், மெட்ராஸ், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை உள்பட சூர்யா, கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்தவர், கே.ஈ.ஞானவேல்ராஜா. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை நீதிமன்றத்தில் நடந்து வரும் பண மோசடி வழக்கில் ஞானவேல்ராஜா நேற்று ஆஜராக வேண்டியிருந்த நிலையில், திடீரென்று அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2020

    20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • birthdayceleb17

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

  • guinness17

    2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

  • amavasai17

    மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்