SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலன் உதவியுடன் கொல்ல முயற்சி ரத்த வெள்ளத்தில் துடித்த கணவர் சாவுக்காக காத்திருந்த இளம்பெண்: கூலிப்படையினருடன் போலீசில் சிக்கினார்

2020-08-15@ 00:42:58

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி கேசவதிருப்பாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 38). போட்டோகிராபர். இவரது மனைவி காயத்ரி (35). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு குழந்தை உள்ளது. கணேஷ் கடந்த 4ம் தேதி நள்ளிரவில் வீட்டு படுக்கை அறைக்குள் படுகாயங்களுடன் கிடந்தார். இவரை யாரோ கும்பல் தாக்கிவிட்டு சென்றதாக மனைவி காயத்ரி கூச்சலிட்டார். அதன்பேரில், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். இவர்களின் தகவல் காரணமாக வடசேரி போலீசார் சென்று, கணேசை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரத்தில்  கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கணேஷை கள்ளக்காதலன் மற்றும் 2 லட்சத்துக்கு பேரம்பேசி கூலிப்படையை ஏவி தாக்கியது தெரியவந்தது.
இதுதொடர்பாக காயத்ரி மற்றும் கூலிப்படை விஜயகுமார்(45), கருணாகரன் (46) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  காயத்ரியிடம் நடந்த விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: காயத்ரிக்கும், மதுரையில் உள்ள ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இவர் நாகர்கோவில் செட்டிக்குளத்தில் ஜெராக்ஸ் சென்டர், மழலையர் பள்ளி நடத்தி வந்தவர் ஆவார். இவர் தொழில் மேம்பாட்டுக்காக, காயத்ரி தனது கணவரின் பெயரில் இருந்த வீட்டை அடகு வைத்து 10 லட்சம்  கொடுத்தார்.

இதில் சந்தேகப்பட்ட கணவரை காதலன்மற்றும் கூலிப்படை உதவி யோடு   கொல்ல திட்டமிட் டுள்ளார். சம் பவத்தன்று நள்ளிரவு வீட்டின் கதவை காயத்ரி திறந்து வைத்திருக்க, கணேசை கம்பியால் தாக்கிவிட்டு கூலிப்படையினர் தப்பி உள்ளனர். பின்னர் லைட்டை போட்டு பார்த்தபோது கணேஷ் இறக்கவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரி, கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிகாலை வரை காத்திருந்தும் கணேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டு இருந்ததால்  யாரோ தாக்கியதாக காயத்ரி கூச்சலிட்டு நாடகமாடி உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2020

  20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்