SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய அரசுக்கு 57,128 கோடி: டிவிடெண்ட் வழங்க ஒப்புதல்: ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முடிவு

2020-08-15@ 00:30:26

˜* மத்திய அரசுக்கு பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம், ரிசர்வ் வங்கி நிதியில் மத்திய அரசு கை வைக்கிறது.
˜* கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இதில் உபரி நிதி 52,637 கோடி.
˜*  மத்திய அரசு பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி மூலம் கிடைக்கும் வருவாய் 60,000 கோடி என கணக்கிட்டிருந்தது.
˜* மத்திய அரசு பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி மூலம் கிடைக்கும் வருவாய் 60,000 கோடி என கணக்கிட்டிருந்தது.

புதுடெல்லி:  மத்திய அரசுக்கு 57,128 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 584வது  மத்திய வாரிய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம், ரிசர்வ் வங்கியிடம் நிதி கேட்டு வருகிறது. ஏற்கெனவே நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது கூட, ரிசர்வ் வங்கி உபரி நிதியில் மத்திய அரசு கைவைத்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இதில் உபரி நிதி 52,637 கோடி அடங்கும்.  லாபத்தில் மத்திய அரசுக்கு பங்கு வழங்குவது தொடர்பாக முடிவு செய்ய, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் 2018ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே இடைக்கால டிவிடெண்ட் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.  எனவே, இந்த ஜூன் மாதம் வரையிலான டிவிடெண்ட் தொகையை ரிசர்வ் வங்கி வழங்கவில்லை. கடந்த ஜூன் மாதத்தின்படி, 83 சதவீதத்தை தாண்டி விட்டது.  நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அரசு, அதில், ரிசர்வ் வங்கி மூலம் கிடைக்கும் வருவாய் 60,000 கோடி என கணக்கிட்டிருந்தது. இதுவரை எதுவும் வராத நிலையில், தற்போது நிதிப்பற்றாக்குறையை தீர்க்க ரிசர்வ் வங்கியிடம் டிவிடெண்டை மத்திய அரசு எதிர்பார்ப்பதாக இந்த மாத துவக்கத்திலேயே தகவல்கள் வெளியாகின.

 கொரோனா ஊரடங்கால் மத்திய அரசுக்கு வரி வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கடந்த ஏப்ரல் ஜூன் காலாண்டில் 6.62 லட்சம் கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது.  இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் 584வது  மத்திய வாரிய குழு கூட்டம், அதன் கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், கணக்கீட்டு ஆண்டு 2019-20க்கு மத்திய அரசுக்கு 57,128 ேகாடி வழங்க குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2020

    22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • taj21

    6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

  • ezhumalaiyaan21

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

  • school21

    ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

  • rashya21

    ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்