SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லூரி சேர்க்கை பணிகளுக்காக செல்லும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் காட்டினாலே போதும்; இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவிக்க வேண்டும் : டிடிவி தினகரன்

2020-08-14@ 16:00:26

சென்னை : இ-பாஸ் நடைமுறையால் கல்லூரி சேர்க்கை பணிகளுக்காக செல்லும் மாணவர்கள் சிரமம் அனுபவிக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.ஊரடங்கு விதிகளின்படி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ- பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவசர தேவைக்காக பாஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இ - பாஸ் கிடைப்பதில்லை என்றும் அதே சமயம்,சில ஏஜெண்டுகளிடம் 3000 ரூபாய் பணம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் பாஸ் தயாராகி விடுவதாகவும்  புகார்கள் எழுகின்றன. இந்த புகார்களை தொடர்ந்து இ - பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு  மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும்  மாணவர்களும்  அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள். இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால்,அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும்; மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையில் அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது,' எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்