SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 15 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை...சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.86-க்கும் விற்பனை.!!!

2020-08-10@ 09:05:59

சென்னை: கடந்த 15 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில்    கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ்    தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது.

அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின்  பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத்   தொடங்கியுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை  எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தது.

இதன்படி, கடந்த ஜூன் 7-ம் தேதியில் இருந்து 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தது. இருப்பினும், ஜூன் 29ம் தேதியில் இருந்து தொடர்ந்து, 13 நாட்களாக பெட்ரோல், டீசல், விலையில்   மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, ஒரு வாரத்திற்கு பின், கடந்த ஜூலை 7-ம் தேதி டீசல் விலை லிட்டருக்கு, 19 காசுகள் உயர்ந்து, 77.91 ரூபாயாக அதிகரித்தது. அதேசமயம், பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல், 83.63     ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், கடந்த 6 நாட்களுக்குப்பின் கடந்த 12-ம் தேதி டீசல் லிட்டருக்கு,10 காசுகள் உயர்ந்து 78.01 ரூபாயாக அதிகரித்தது. தொடர்ந்து, 13-ம் தேதி 10 காசு உயர்ந்தது. பின் 14-ம் தேதி மாற்றமில்லாமல் 15-ம் தேதி 11 காசு உயர்ந்தது. 16-ம் தேதி  விலை மாற்றமில்லாத நிலையில், 17-ம் தேதி 26 காசுகளும், 18-ம் தேதி 11 காசுகளும் உயர்ந்தது. 19-ம் தேதி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாத நிலையில், 20-ம் தேதி 10 காசுகள் அதிகரித்தது. ஆனால், 21-ம் தேதி முதல் 24-ம் தேதி     வரை 4 நாட்களாக விலை உயரவில்லை. ஆனால், கடந்த 25-ம் தேதி மீண்டும் டீசல் லிட்டருக்கு 13 காசுகள், 26-ம் தேதி,13 காசுகள் உயர்ந்தது. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி முதல் இன்று ஆகஸட் 10-ம் தேதி வரை 15 நாட்களாக டீசல் விலை  மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. கடந்த 43 நாட்களாக மாற்றமில்லாமல் பெட்ரோல் விலை உள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.86-க்கும் விற்கப்படுகிறது. கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.8.09ம், டீசல் ரூ.10.74ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இதுவரை இன்று பெட்ரோல் டீசல் விலை

தேதி    பெட்ரோல்    உயர்வு    டீசல்    உயர்வு

27        83.63         00 காசு    78.86    00 காசு
28        83.63         00 காசு    78.86    00 காசு
29        83.63         00 காசு    78.86    00 காசு
30        83.63         00 காசு    78.86    00 காசு
31        83.63         00 காசு    78.86    00 காசு
01        83.63         00 காசு    78.86    00 காசு
02        83.63         00 காசு    78.86    00 காசு
03        83.63         00 காசு    78.86    00 காசு
04        83.63         00 காசு    78.86    00 காசு
05        83.63         00 காசு    78.86    00 காசு
06        83.63         00 காசு    78.86    00 காசு
07        83.63         00 காசு    78.86    00 காசு
08        83.63         00 காசு    78.86    00 காசு
09        83.63         00 காசு    78.86    00 காசு
10        83.63         00 காசு    78.86    00 காசு


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • supersonic30

    இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!: 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது..புகைப்படங்கள்..!!

  • up30

    உ.பி.யில் வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்: குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலுக்கும் போராட்டம்..!!

  • elephant30

    போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

  • newyark30

    கொரோனாவின் தாக்கம் குறைந்தது!: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • road30

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்!: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்