SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா

2020-08-10@ 01:08:27

பார்சிலோனா: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட பார்சிலோனா அணி தகுதி பெற்றது. கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பார்சிலோனா - நேபோலி அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் லெங்லெட் 10வது நிமிடத்திலும், கேப்டன் லியோனல் மெஸ்ஸி 23வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

லூயிஸ் சுவாரெஸ் பெனால்டி வாய்ப்பில் (45+1’) கோல் போட்டார். நேபோலி வீரர் இன்சைனி (45+5’) பெனால்டி வாய்ப்பில் ஆறுதல் கோல் அடித்தார். முதல் கட்ட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆகியிருந்த நிலையில், 2ம் கட்ட ஆட்டத்தில் 3-1 என வென்றதன் மூலம் பார்சிலோனா அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 2006-07 சீசனில் இருந்து அந்த அணி தொடர்ச்சியாக கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கால் இறுதியில் பார்சிலோனா - பேயர்ன் மியூனிச் அணிகள் மோதுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்