SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு....எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரம்

2020-08-09@ 17:46:08

திருவனந்தபுரம்: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 5 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேரளம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலா பகுதியில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 5 பேரின் உடல் மீட்கப்பட்டதாக் பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 36 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி கயத்தாறு பகுதியை சேர்ந்த 40 குடும்பங்கள் தங்கியிருந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி கனமழையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய இணை மந்திரி முரளீதரன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்