SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு...!! அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் மறுப்பு; ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள்

2020-08-09@ 15:49:42

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை இந்தியளவில் 2 மில்லியனை கடந்தது. தினந்தோறும் அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. இருப்பினும், தொற்றுக்கு எதிராக முன்களத்தில் நின்று மருத்துவப் பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது.

அந்த தகவல் குறித்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது; தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் தகவலை இந்திய மருத்துவசங்கத்தின் தமிழக தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனை சிகிச்சைகளில் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  சிகிச்சை பெற்று வருபவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையில், கொரோனா தொற்றானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா மரண எண்ணிக்கையில் எதுவும் மறைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்