SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவமனைக்கு ரெகமண்டேஷனோடு வந்து கொரோனாவுடன் செல்லும் கரை வேட்டிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-09@ 01:25:01

‘‘ரெகமண்டேஷன் லெட்டர் எதுக்கெல்லாம் ெகாடுக்கலாம்னு ஒரு வெவஸ்தையே இல்லாம போச்சாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ரேஷன் கார்டு வாங்கவும், பள்ளி, கல்லூரியில் சீட் வாங்கவும், வேலை வாங்கவும், மருத்துவமனையில் கட்டணம் குறைக்க சொல்லியும் செல்வாக்குள்ள அல்லது மக்கள் பிரதிநிதிகளிடம் ரெகமண்டேஷன் ெலட்டர் வாங்கிட்டு போய் ெகாடுத்தா பலன் உண்டு. ரேஷன் கார்டு கிடைக்கும், இலவச பட்டா கிடைக்கும் அதையெல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வரலாம். ஆனால் இரும்பாலை மாவட்ட லொள்ளு தாங்க முடியலையேன்னு கொரோனா வார்டில் உள்ள நர்சுகள் நொந்து போய் இருக்காங்க... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள், விபத்தில் அடிபட்டவர்களை பார்க்க வரும்போது ஆறுதல், ஆரஞ்சு பழம், சாத்துக்குடி, ஹார்லிக்ஸ் உள்ளிட்டவை வாங்கிக் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த மாவட்ட அட்ராசிட்டி இருக்கே... அது சினிமாவுல வர்ற கிளைமாக்ஸை விட அதிகம். அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பேஷன்டுகளை பார்க்க வருகிறோம் என்ற பெயரில் சிலர் தனியாகவும், கும்பலாகவே பார்க்க வாராங்களாம். மாஸ்க் மட்டும் மாட்டிக்கிட்டு கொரோனா வார்டில் அனுமதிக்க கோரி அடம் பிடிக்கிறாங்களாம்.

அப்படியே உள்ளே போய் கொரோனா நோயாளிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன், பார்சல்களை கொடுத்து பாச மழை பொழியறாங்களாம்... இதை பார்த்த சில நர்சுகள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க... கேட்டா ரெகமண்டேஷன் லெட்டரை காட்டுறாங்க... பிரியாணி கொடுப்பது தப்பில்லை.... அப்படியே கொரோனாவை வாங்கிட்டு மற்றவர்களுக்கு பரப்பாமல் இருந்தால் சரி. பேஷன்டுகளை பார்க்க அனுமதிக்காவிட்டால், லஞ்சம் கேக்குறாங்கன்னு வேற, ஒரு குரூப் கிளப்பி விடுதாம். அதே போல் கட்சிகளின் லெட்டர் பேடுகளோடு பேஷன்டுகளை பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் வருதாம். இப்படி வரும் பார்ட்டிகளையும், அவர்களால் ஏற்படும் பிரச்னைகளையும் சமாளிப்பதா இல்லை பேஷன்டுகளை ஸ்டிரிக்டா கவனிப்பதா என்று இருதலை கொள்ளி எறும்பாக துடிக்கிறாங்களாம் நர்சுகளும், ஊழியர்களும்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கொரோனா வழக்கு கொடுக்கும் கொடுமையை யாரிடம் சொல்வது... இந்த கவர்னமென்டுக்கு எது எதுக்கு தான் டார்க்கெட் பிக்ஸ் பண்றதுன்னே தெரியலனு காக்கிகள் புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்தை சேர்ந்த மாவட்ட காக்கிகள் தான் டென்ஷனில் இருக்காங்க... பட்டப் பெயர் மாதிரி அவங்களும் தூக்கத்தை தொலைச்சுட்டாங்களாம். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கொரோனா ஊரடங்கை மீறியதாக ஒரு நாளைக்கு குறைந்தது 12 வழக்கு பதிவு செய்யணும்.

அதிக டூவிலர் பறிமுதல் செய்யணும்னு உயரதிகாரிகள் உத்தரவாம். இதனால போலீசார் காலை முதல் இரவு வரை அப்பாவிகளை எல்லாம் பிடித்து வழக்கு பதிவு செய்யறாங்களாம். போலீசாரின் இந்த ‘டார்கெட்’ வேட்டையில், விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சிக்கிறாங்களாம். மற்றவர்களை பிடித்தால் உடனடியாக முக்கிய பிரமுகர்கள் உயர் அதிகாரிகளோ சிபாரிசு செய்திட.. பறிமுதல் செய்த வாகனத்தை எப்படி ஒப்படைப்பது... ‘டார்கெட்டை’ எப்படி விடுவது சமாளிப்பது என்று மதுரை மாவட்ட போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரு வேளை வயிற்று சாப்பாட்டுக்காக போராடும் தெரு வியாபாரிகளிடம் மாதம் தவறாமல் சம்பளம் வாங்கும் காக்கிகள் வெறும் 100 ரூபாய் லஞ்சம் வாங்குவது... தெரு வியாபாரிகளின் ஒரு வேலை சாப்பாட்டுக்கும் தொழிலுக்கான மறு முதலீட்டுக்கும் வேட்டு வைத்து இருக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புளியந்தோப்பு காவல் சரகம் திருவிக நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவரும் டிரைவரும் சேர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் பிளாட்பார கடைகளில் தினமும் 100 ரூபாய் வீதம் வசூல் செய்கிறார்களாம். இதை இரவு வீட்டிற்கு செல்லும்போது சரி சமமாக பிரித்துக் கொள்கிறார்கள். ஒருநாளைக்கு ஆளுக்கு குறைந்தது 2,000 ரூபாய் இல்லாமல் போறது இல்லையாம். கொரோனா சமயத்துல தள்ளுவண்டிகளில் வியாபாரம் குறைவாக உள்ளது.. மாமூலை குறைச்சுக்குங்க என்று வியாபாரிகள் சொன்னால், மறுநாள் அந்த இடத்தில் கடை போடக்கூடாது என மிரட்டுகிறார்களாம்.

அதுமட்டுமின்றி குமரன் நகர் சந்திப்பு பகுதியில் 35 வருடங்களாக மீன் கடை நடத்தி வரும் ஒரு பாட்டியை நீ இனி இங்கு மீன் கடை போடக் கூடாது எனக் கூறி அந்த இடத்தில் வேறு ஒரு நபரை மீன் கடை போட வைத்து வசூல் செய்கிறார்கள். வயதான காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பாட்டி புலம்பி வருகிறாராம். அழுகும் பொருளான காய்கறிகள், பழம், மீன் போன்றவற்றை ஒரு நாள் முழுவதும் விற்றால் கூட தினசரி கந்துவட்டி கடன் போக கையில் மிஞ்சுவது 200 அல்லது 500 தான் இருக்கும். இதில் காக்கிகளுக்கு 100 ரூபாய் போனால்... அன்றைக்கு சாப்பாடு, மறு நாள் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி, பழம், மீன்களை வாங்க காசு இல்லை. இதனால் மறுநாளும் கந்து வட்டிக்கு பணம் வாங்கினால் தான் பிழைப்பை ஓட்ட முடியும்.. போலீசார் தான் கருணை காட்ட வேண்டும் என்கின்றனர் ஏழை பாழைகள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விவிஐபி அரசியல் கணக்கு எப்டி...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘விவிஐபி, 4 நாள் பயணமா நெல்லை, மதுரை, திண்டுக்கல், தென்காசிக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது தொகுதி வாரியா நிர்வாகிகளை அழைத்து பேசினாராம். இளைஞர் பாசறைக்கு படித்த இளைஞர்களை அதிகளவில் சேர்க்க உத்தரவு போட்டார். ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கு ஒரு நிர்வாகக்குழு போடணுமாம். பாசறையில் இருக்கும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றாராம். தேர்தல் வேகத்தை கூட்டுவதற்காக இப்படி சொல்லி வச்சிருக்காராம்.. இதெல்லாம் நடக்கிற கதையா என கூறி சிரிக்கின்றனராம் பாசறையினர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

 • modiji17

  பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்