SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில திட்ட இயக்குநரா இருக்கிற டாக்டர் அடிக்கிற கொள்ளையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-08@ 02:26:48

‘‘வர... வர... நாட்டுல ஊழல் புரையோடிகிட்டே போகுதுப்பா...’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘நானும் ஒரு புரை மேட்டரோடத்தான் வந்திருக்கேன்... அதாவது, தமிழகம் எங்கும் பார்வையிழப்பை தடுக்க கண்புரை அறுவை சிகிச்சை செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு கோடிக்கணக்குல நிதி வழங்குதாம்... இதற்கு மாநில திட்ட இயக்குநராக ‘நிலவின் பெயரை கொண்ட’ டாக்டர் ஒருவர் இருக்காராம். இவர் பதவிக்கு வந்த நாள் முதல், மாநிலம் முழுவதும் வேண்டப்பட்ட கண் மருத்துவமனைகளோட மட்டும் டை-அப் வச்சுக்கிட்டு நிதியை வாரி வழங்குகிறாராம்... அந்த ஆஸ்பத்திரிகளிலும் கண் அறுவை செய்ததாக கூறப்படும் நபர்களின் பெயர் மட்டுமே மாவட்ட அலுவலகங்களில் இருக்கிறதாம்... இவங்களுக்கு ஆபரேஷன் நடந்ததா, இல்லையா என்பது போன்ற விபரங்கள் இல்லையாம்.
இதை கண்காணிக்கும் மாவட்ட அதிகாரிகளோ கண் அறுவை செய்த நபர்கள் பட்டியலை நூறு சதவீதம் ஆய்வு நடத்தனும்னு சொல்றாங்களாம்.... இதையடுத்து மாவட்ட அளவுல பார்வையிழப்பு தடுப்பு சங்க அலுவலகத்துல இருக்குற பணியாளர்களிடம், ‘மாவட்ட அதிகாரிகளை உங்களால் சரிக்கட்ட முடியவில்லையா...’ எனக்கூறி, சில மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக வேலை செய்தவங்களை எல்லாம் பணிநீக்கம் செய்றாராம்... காலியிடங்களில் சில லகரங்களை வாங்கி கொண்டு புதிய நியமனங்களையும் செய்கிறாராம். இவர் பதவிக்கு வந்த நாள் முதல் வாங்கப்பட்ட உபகரணங்கள், கண் மருத்துவமனைகளுக்கு வழங்கிய நிதி, கண் அறுவை செஞ்சவங்க பட்டியலை, கடந்த 2007ல் நடந்த சிபிஐ விசாரணை போல, இப்பவும் விசாரணை நடத்தி உண்மைய வெளியே கொண்டு வரணும்னு சுகாதாரச் செயலாளர் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட தரப்பு கொண்டு போய் இருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் மனசு ரீதியாகவும் இலை கட்சி தொண்டர்கள் பிளவு பட்டு இருக்காங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்ட இலை கட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு நீண்ட காலமாக மாநகர், புறநகர் என இரண்டு மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பதவி வகித்து வந்தனர். இலை கட்சி வரலாற்றில் தற்போது முதல் முறையாக கோவை மாவட்ட இலை அமைப்பு நிர்வாக ரீதியாக மூன்றாக பிரிக்கப்பட்டு, 3 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு மாவட்ட செயலாளர், தன்னை டம்மி செய்துவிட்டார்கள் என புலம்புகிறாராம். காரணம், இலை இரண்டாக உடைந்தபோது இவர் ஒரு அணியில் இருந்தாராம். இதன் காரணமாக, கட்சியின் மேலிடம் என்னை டம்மியாக்கி உள்ளது என சக இலை நிர்வாகிகளிடம் சொல்லி சொல்லி புலம்பி வருகிறாராம். இவர், மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு, பல காரியங்களை கோடிகளை கொட்டிவிட்டார் என்று ஒரு சாரார் சொல்லி வர்றாங்க... ஆனாலும், மாவட்ட செயலாளர் பதவியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்கிறார். இதில், புதிதாக மாவட்ட செயலாளர் பதவிக்குள் நுழைந்த ஒருவர் மட்டும் படுஹேப்பியாக இருக்கிறாராம்... காரணத்தை விசாரித்தால் கிடைக்க வேண்டிய கரன்சி, மரியாதை போன்றவை எல்லாம் தானாகவே கிடைக்கிறதாம்... மேலிடமும் அவரை பல்ேவறு விஷயங்களில் மாவட்டத்தில் முன்னிறுத்துதாம். இது தான் மற்றவர்களுக்கு மன உளைச்சலை கொடுக்குதாம்... அதுபோல நாமும் எப்படி மாறுவது என்று தன் அடிபொடிகளிடம் ரூம் போட்டு யோசிக்க சொல்லியிருக்கிறார்... மக்கள் பிரதிநிதியாக இருந்து மாவட்ட செயலாளர் ஆனவர்...’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘டெபுடி கலெக்டரின் பெயரை கூறி பந்தா காட்டுகிறாராமே ஒரு பெண் ஆபரேட்டர்...’’
‘‘வேலூர் மாவட்டம் கனியான ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டப் பிரிவில் தீயான பெண்மணி ஒருவர் கணினி ஆபரேட்டராக 10 ஆண்டுகளாக உள்ளாராம். இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உயர்பொறுப்பில் உள்ள கர்மவீரரின் பெயரை கொண்டவரின் மனைவியாம். அந்த பந்தாவுடன், இவர் அந்த ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓக்களையும், டெபுடி பிடிஓக்களையும் பாடாய்படுத்தி வருகிறாராம். இவரும் வேலை செய்வதில்லையாம். மற்றவர்களையும் வேலை செய்ய விடுவதில்லையாம்.
அதோடு 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களுக்கு ஊதியத்தையும் தர முடியவில்லையாம். சமீபத்தில் ஊதியம் வழங்கவில்லை என்று கூறி 100 நாள் திட்டப்பணியாளர்கள் ஒன்றியத்தில் வந்து பிரச்னையில் ஈடுபட்ட சம்பவமும் நடந்ததாம். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அதிகாரிகள் இதுதொடர்பாக தங்கள் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, அங்கு அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். அங்கு, ‘அந்த அம்மாவை வேலை வாங்காதீர்கள். அவர்கள் சும்மா வந்து போகட்டும்’ என்று சொல்கிறார்களாம். இதனால் என்ன செய்வது என்று தலையை பிடித்துக் கொள்கிறார்களாம் ஒன்றிய அலுவலகத்தில்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆளுங்கட்சி விவகாரம் என்னயிருக்கு..’’
 ‘‘இலை கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணி பக்கம் திருச்சி மத்திய மண்டலமான புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் நகர்மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், ஆதரவாளர்கள் என அடுத்தடுத்து சென்ற வண்ணம் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் அணியால் புதுக்கோட்டையில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லையாம். இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
 இலை கட்சியின் நிர்வாக வசதிக்காக புதுக்கோட்டையை வடக்கு, தெற்கு என 2 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதாம். இதனால் இந்த முறை பதவிகளை பெற ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளார்களாம்... ஆனால் பதவிகளை பெற வேண்டும் என்றால் ஓபிஎஸ் அணியில் இருந்தால் நமக்கு எந்த பதவியும் கடைசி வரைக்கும் கிடைக்காது என தெரிந்து இபிஎஸ் அணி பக்கம் கூண்டோடு தாவ முடிவு செய்துள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2020

  22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • taj21

  6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

 • ezhumalaiyaan21

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

 • school21

  ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

 • rashya21

  ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்