SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யார் இந்த பட்கல் ?

2013-08-30@ 00:28:47

பெங்களூர் : 1983ம் ஆண்டு கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள சிறிய கடற்கரை நகரமான பட்கலில் பிறந்தவன் யாசின் பட்கல். இவனது இயற்பெயர் முகமது அகமது சரார் சித்திபாபா. இவரது தந்தை தொழிலதிபர் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றுவிடுவார். இதனால் தனது தாயுடன் வசித்த இவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பட்கல் நகரத்திலேயே முடித்தான். பொறியியல் படிப்பை முடித்த இவன் தொழிலில் தந்தைக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றான்.

அங்கு தந்தைக்கு சரிவர உதவாமல் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்தான். இதன் பின்னர் பட்கல் பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அங்கிருந்து தப்பிய அவன் புனே பகுதியில் உள்ள அவனது பால்ய நண்பன் இக்பால் இஸ்மாயில் ஷாபந்த்ரி என்பவனுடன் சேர்ந்து யுனானி மருத்துவ பயிற்சி பெற்று வந்தான்.

இதனிடையே இக்பால் மதபோதகராக மாறினான். சிறிது காலத்திற்கு பிறகு இக்பாலும் அவரது சகோதரரான ரியாஸ் இஸ்மாயில் என்பவரும் சேர்ந்து ஒரு நடமாடும் முஸ்லிம் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். நாளடைவில் இந்த அமைப்பை லஷ்கர்,இ,தொய்பாவுடன் இணைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட தொடங்கினார்கள். இந்த அமைப்பில் சேர்ந்த யாசின் பட்கல் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட தொடங்கினான். இதன் பின்னர் தான் இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கி கடந்த 2008 முதல் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டுகள் வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டான்.

தனது பொறியியல் நுண்ணறிவால் இவனே வெடிகுண்டுகளை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் வெடிக்கவும் வைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தான் பிறந்த மாநிலமான கர்நாடகாவின் சட்டம் , ஒழுங்கை சீர்குலைக்க 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் மூளையாக செயல்பட்டுள்ளான். மேலும் 2012ம் ஆண்டு புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு சம்பவத்திலும் தொடர்பு கொண்டிருந்தான்.

இந்தியன் முஜாகிதீன் துவக்கம்: பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் நிதி உதவியுடன் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு. இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யாசின் பட்கல், தனது சகோதரர்களான ரியாஸ் மற்றும் அப்துல் சுபான் குரேஷி ஆகியோருடன் சேர்ந்து இந்த இயக்கத்தை தொடங்கினான்.

டிஎன்ஏ சோதனை

யாசின் பட்கலின் அடையாளத்தை உறுதி செய்ய உடனடியாக ஒரு சிறப்பு குழுவை அனுப்பிவைக்கும்படி கர்நாடக போலீசாரை பீகார் போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் யாசின் பட்கலுக்கு டிஎன்ஏ சோதனை செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கும் கர்நாடக போலீசாரிடம் உதவி கோரியுள்ளனர்.

sms spy app read spy apps free
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்