SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!!

2020-08-06@ 15:30:32

டெல்லி: இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.64 லட்சம் அளவிற்கு உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,64,537 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 19 லட்சம் என்ற அளவை கடந்தது.  அதற்கு 2 நாட்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 18 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது.  அந்த நாளில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,509 ஆக உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 12,82, 215 ஆக இருந்தது.  குணமடைந்தோர் விகிதம் 67.19 சதவீதம் ஆக உயர்ந்திருந்த நிலையில் உயிரிழப்பு விகிதம் 2.09 சதவீதம் ஆக இருந்தது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இன்றைய தகவலின்படி, குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 28 ஆயிரத்து 336 ஆகவும், குணமடைந்தோர் விகிதம் ஆனது 67.6 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது என தெரிவித்து உள்ளது.  இதனால் ஒவ்வொரு நாளும் குணமடைந்தோர் விகிதம் அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2020

    20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • birthdayceleb17

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

  • guinness17

    2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

  • amavasai17

    மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்