SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டிபட்டி மக்கள் பணத்தை வீணாக்கி போண்டியாக்கும் அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-06@ 00:48:27

‘‘ஒரு அரசு நிறுவனம் நன்றாக செயல்பட்டால்... அதை எப்படியாவது முடக்கி தனியாருக்கு தாரை வார்ப்பது காலம் காலமாக நடக்குது... இப்போது எந்த மாவட்டத்தில் இந்த அசைன்மென்ட்டாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரியில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாக குளறுபடியை போக்க ரப்பர் கழகத்தில் நிர்வாக இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார். ஆனால் பழைய அதிகாரியின் குற்றச்சாட்டுகள் மட்டும் அப்டியே உள்ளது. அவரை மாற்றிவிட்டால் அவர் செய்த தவறுகளுக்கு தண்டனையே கிடையாதா... உயர் மட்டத்தில் தவறு செய்தால் டிரான்ஸ்பர் மட்டும் தானா என்று அங்குள்ளவாகளே வேதனையை தெரிவிக்கின்றனர்...

அரசு ரப்பர் கழகத்தில் லாபம் ஈட்ட முடியவில்லை, கழகம் நஷ்டத்தில் இயங்குவது...இதை மூடுவது நலம் என்றே பழைய அறிக்கையை தூசு தட்டி புதுசாக ஜெராக்ஸ் எடுத்து சென்னைக்கு அனுப்புவதையே தொழிலாக வைத்துள்ளார்கள். ஒருவரும் ரப்பர் கழகத்தை லாபத்தில் கொண்டு செல்வது எப்படி...குளறுபடியை சரி செய்து எப்படினு யோசிக்கிறதே இல்லை என்பதே ஊழியர்களின் குற்றச்சாட்டு... அப்புறம் ரப்பர் கழக சொத்துக்களை வனத்துறைக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்திருப்பதுடன், சென்னையில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் ஒரு குழுவாக செயல்படுவதாகவும், அந்த குழு செயல்பாடுகளை உடைக்கும் விதத்தில் இந்த அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புது போஸ்டிங் கிடைத்தவுடன் பெண் அதிகாரியுடன் செலிபிரேட் செய்தவர் யாரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இரும்பு ஆலை மாவட்ட யுனிவர்சிட்டிக்குள்ள நடக்குற சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், சமீபத்துல வெளியே நடந்த ரகசிய விருந்து தான், அங்க சுடச்சுட போசறாங்க. யுனிவர்சிட்டியில காலியான சில முக்கிய பதவிகளுக்கு, சமீபத்துல பொறுப்பு அதிகாரிகள நியமிச்சாங்க. இவங்களுக்கு போதுமான அனுபவம் இல்லைனாலும், தனக்கு சாதகமான ஆட்களுக்கு பொறுப்பு கொடுத்திருக்குறதா நிர்வாகத்து மேல, வாத்தியாருங்க கடும் கோவத்துல இருக்காங்க. பொறுப்பு வாங்குன அதிகாரி ஒருத்தரு தனக்கு வேண்டிய பெண் பொறுப்பு அதிகாரிய தனியா கூட்டிட்டு போன புது ஆபிசர், மாநகருக்குள்ள இருக்குற 3 ஸ்டார் ஹோட்டல்ல ரகசிய விருந்து வச்சு அமர்க்களப்படுத்திட்டாராம். ஏற்கனவே முறைகேடு, சஸ்பெண்ட்னு பல சர்ச்சையில யுனிவர்சிட்டி சிக்கியிருக்குற நிலையில, பொறுப்பு கொடுத்ததுக்கே இந்த அமர்க்களமான்னு வாத்தியாருங்க புலம்பி தவிக்குறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ விவசாயமே நடக்காத இடத்துல களத்துமேடு... வீடுகளே இல்லாத சுடுகாட்டு பகுதியில் போர்வெல்ல அமைத்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்குறாங்களாமே..’’
‘‘தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சியில மக்களுக்கு பயன்படாத திட்டங்களைத்தான் ஊராட்சி நிர்வாகம் செய்யுதாம். பல லட்சங்கள் நிதி ஒதுக்கி பல்வேறு இடத்துல தடுப்பணை கட்டிருக்காங்க. ஆனால் இந்த தடுப்பணையால யாருக்கும் பலன் இல்லையாம். அப்புறம் எதுக்கு கட்டுனாங்கன்னு பார்த்தா கமிஷன்னு சொல்றாங்க. தற்போது ஆண்டிபட்டி வளர்ந்து வரும் நகரமாக மாறி வருவதால், ஓடைகள், கண்மாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு பண்ணி வீடுகளை கட்டிட்டாங்க... இந்த பகுதியில தடுப்பணை கட்டப் போறோம்னு சொல்லி பல லட்சங்கள் நிதி ஒதுக்கி கட்டுனாங்களாம்...

தடுப்பணை கட்டின இடத்திலே தண்ணீர் போகலையாம்... குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் தான் செல்கிறதாம்.... இந்த மாதிரி தேவையில்லாத இடத்துல தடுப்பணைகளை கட்டியதால அரசு பணம் வீண்... அதிகாரிகள், கரைவேட்டிகள் பாக்கெட் நிரம்புதாம். இதுபோன்று பயன்படாத பகுதியில தடுப்பணைகள் கட்டுவதற்கு, தனியார் கான்ட்ராக்டர்கள் பலரும் முட்டி மோதுறாங்களாம். காரணம் இங்கே தரம் முக்கியமில்லை என்பதால் தானாம்...  ஆண்டிபட்டி போண்டி பட்டி ஆனாலும் ஆகலாம்... அந்த அளவுக்கு அனைத்து நிதியையும் சுரண்டிட்டாங்க... ’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தண்ணீயில காசு பார்க்கும் மாவட்டம் எது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இது சரக்கு இல்ல... உண்மையான தண்ணீர் பற்றியது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது பில்லூர் அணை. இத்திட்டத்தின்கீழ் கோவை மாநகர், புறநகர், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு உள்ளாட்சி பகுதிகள் பயன்பெறுகின்றன. இக்குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில், நிறைய தனியார் தொழிற்சாலைகள், மோட்டார், பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்கள் என பல்வேறு வகையான கம்பெனிகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு தேவையான தண்ணீர், பில்லூர் குடிநீர் திட்ட பிரதான குழாயில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்படுகிறது. இதற்கு, ‘கிருஷ்ணர்’’ பெயர் கொண்ட குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரி ஒருவர் உதவிபுரிந்து வந்தார்.

இதற்காக, மாதம்தோறும் பல லட்சம் மாறுதாம். இந்த விவகாரம் மேலிடத்துக்கு போனதால், அவர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். ஆனாலும், இவருக்கு கீழ்நிலையில் உள்ள 2 அதிகாரிகள், முன்னவரின் அடியொற்றி நடக்கிறார்களாம். இவர்களில், ஒருவர் பெண் அதிகாரி. இத்துறையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள உயரதிகாரி கிடுக்கிப்பிடி போட்டாலும், இவர்கள் சிக்குவதில்லை. கழுவுற மீனில் நழுவுற மீனாக இருக்கிறார்கள்... இவர்களை மாற்றினால் இரண்டு மாவட்ட மக்களின் தாகம் தீரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2020

  22-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • taj21

  6 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால்!: அதிகாலை முதலே திரண்ட மக்கள்..!!

 • ezhumalaiyaan21

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

 • school21

  ஜம்மு - காஷ்மீர், ம.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!: ஆர்வமுடன் கல்வி பயிலும் மாணவர்கள்..!!

 • rashya21

  ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்