SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனம் வேண்டும்

2020-08-06@ 00:27:42

கொரோனா போர் வீரர்கள் என்று பிரதமர் மோடி தொடங்கி, நாட்டு மக்கள் அனைவராலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பாராட்டப்படுகிறார்கள். அத்தனை தீரத்துடன் போதுமான முழு கவச உடை கிடைக்காத காலத்தில் கூட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவர்கள் அஞ்சவில்லை. நாட்டிலேயே தமிழகம் சுகாதாரத்துறையில் முந்தியிருக்கிறது என்றால் அதற்கு இங்குள்ள கட்டமைப்பும், படிப்படியாக மேற்கொண்ட பணிகளும், அரசின் ஊக்கமும் தான் காரணம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த போர் வீரர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டும், வாக்குறுதி அளித்தும், இன்று வரை நிறைவேற்றாமல் இருப்பது அவமரியாதை இல்லையா? மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் சீட்
எப்படியோ, ஆனால் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குத்தான் கிடைக்கும். அப்படித்தான் நீட் தேர்வு இங்கு நுழைவதற்கு முன்பு வரை இருந்தது.

இப்போது பிளஸ் 2 தேர்வில் ஜஸ்ட் பாஸ் செய்து, கோச்சிங் சென்டருக்கு சென்று நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெற்றால் போதும், எம்பிபிஎஸ் சீட் தானாக தேடி வந்துவிடும் என்பது வேறு கதை. எனவே தமிழகத்தில் இப்போது டாக்டர்களாக இருப்பவர்கள் எல்லாம் மாநில அளவில் படிப்பில் முதல் மாணவர்களாக தேர்வானவர்கள். இது மறுப்பதற்கு இல்லை. இப்படிப்பட்ட மருத்துவர்கள், தமிழக அரசிடம் ஊதிய உயர்வு கேட்டு இன்று வரை போராடி வருகிறார்கள். 2009ல் நிதித்துறை ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை பெறுவதற்காகத்தான் இந்த போராட்டம். பல போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள், கைதுகள், இடமாற்றங்கள், நீதிமன்ற கண்டிப்புகள் என அத்தனை நடந்தும், அரசு டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழக அரசை தடுப்பது எது?

கொரோனா சேவையில் அரசு டாக்டர்களின் பணியை தமிழக அரசு புறக்கணிக்க முடியுமா? மற்ற மாநிலங்களை விட நமது டாக்டர்களின் சேவை முன்னணியில் இருக்கிறது என்றால், அவர்களின் சம்பள போராட்டம் முடிவு பெற்று
8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் 22க்கும் மேற்பட்ட மருத்துவர்களை மீண்டும் பழைய இடத்தில் பணியமர்த்தாதது ஏன்? போராடிய டாக்டர்கள் மீது பதியப்பட்ட 17 பி குற்றவியல் ஆணையை இன்று வரை ரத்து செய்யாதது ஏன்?
மார்ச் 24ல் தொடங்கி இன்று வரை கொரோனா பணியில் நமது அரசு மருத்துவர்களின் பணி கொஞ்சமும் தொய்வில்லாமல் நடக்கவில்லையா? வாக்குறுதி கொடுத்த தமிழக அரசுக்கு எதிரான கோபத்தை அவர்கள் இப்போது எந்த இடத்திலும் காட்டவில்லையே? அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற கூடுதலாக ரூ.200 கோடி மட்டும்தானே தேவை. அப்படி இருக்கும் போது முதல்வர் எடப்பாடி இந்த நேரத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களை ஊக்கப்படுத்தினால், இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார்கள் இல்லையா?.. மனம் இருந்தால் நிச்சயம் தமிழக அரசுக்கு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் மார்க்கம் உண்டு.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்