SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாய், சார்ஜா, இலங்கையில் தவித்த 371 மீட்பு

2020-08-05@ 04:32:55

சென்னை: கொரோனா ஊரடங்கில் வெளிநாடுகளில் சிக்கி தவித்தவர்களை மீட்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சார்ஜாவில் தவித்த 157 பேர், இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்களில் 107 பேர் இலவச தங்குமிடத்துக்கும், 47 பேர் ஓட்டலுக்கும் 3 பேர் வீட்டு தனிமைக்கும் அனுப்பப்பட்டனர். துபாயில் இருந்து 180 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது.

அவர்களில் மருத்துவ பரிசோதனை முடிந்து 78 பேர் அரசின் இலவச தங்குமிடத்துக்கும், 97 பேர் ஓட்டல்களுக்கும், 5 பேர் வீட்டு தனிமைக்கும் அனுப்பப்பட்டனர். இலங்கையில் இருந்து 34 பேருடன் சிறப்பு மீட்பு விமானம் இன்று காலை சென்னை வந்தது. அதில் வந்த அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். அந்நிறுவனமே அரசின் சிறப்பு அனுமதியுடன் அழைத்து வந்தது. இவர்கள்  சென்னை நகர ஓட்டலுக்கும் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, மருத்துவ குழுவினரால் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்