SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 1,288 வாகனங்கள் பறிமுதல்; இதுவரை ரூ.19.42 கோடி அபராதம் வசூல்: தமிழக காவல்துறை தகவல்

2020-08-02@ 12:02:00

சென்னை: இந்தியா முழுவதும், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இது ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில்  7 கட்டமாக ஊரடங்கு ஆகஸ்டு 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் இதுவரை அனுமதியின்றி வெளியே சுற்றியதாக,  6,61,299 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,288 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை  9,27,904 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,971 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதாக 8,43,528 வழக்குகள் செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,784 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுநாள் வரையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.19,42,72,598 அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரூ.7,62,520 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்