SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையை போல மற்ற மாவட்டங்களிலும் 20 பேரின் கொரோனா மரணங்கள் மறைப்பு: அதிகபட்சமாக மதுரையைச் சேர்ந்த 10 பேர் சேர்ப்பு

2020-08-02@ 04:23:44

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் மற்றும் 10 நாட்கள் கடந்த நிலையில் சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள 99 பட்டியலில் கொரோனாவால் இறந்த 20 பெயரை சேர்த்துள்ளது. இதில் 10 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையைப் போல மாவட்டங்களிலும் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னையில்  கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக  எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு குழுவை  அமைத்தது. இந்த குழு அளித்த அறிக்கையின் படி மார்ச் 1ம் முதல் ஜூன் 3ம் தேதி வரை விடுபட்ட 444 மரணங்கள் கொரோனா பட்டியலில் சேர்ப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெறும் மரணங்கள் தொடர்பான தினசரி அறிக்கை பெற்று ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைத்து தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.   இந்நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக தமிழகத்தில் 99 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,034 நாளாக உயர்ந்துள்ளது. இதில் 99 மரணங்களில் 20 மரணங்கள் பல நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தவை. இந்த மரணங்கள் தொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை நேற்றைய தினசரி அறிக்கையில் சேர்த்துள்ளது.  

இந்த 20 மரணங்களின் விவரங்கள் பின்வருமாறு: கோவையைச் சேர்ந்த 79 வயதானவர், நெல்லையை சேர்ந்த 81 முதியவர் கடந்த 26ம் தேதி கொரோனாவால் இறந்துள்ளனர். ஜூலை 23ம் தேதி கோவையைச் சேர்ந்த 63 வயது பெண், 22ம் தேதி திருப்பூரைச் சேர்ந்த 73 வயது முதியவர்,21ம் தேதி திண்டுக்கலை சேர்ந்த 72  வயது முதியவர், ஜூலை 16ம் தேதி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 79 வயது ஆண், 5ம் தேதி மதுரைச் சேர்ந்த 55 வயது ஆண், 9ம் தேதி மதுரையை சேர்ந்த 53 வயது பெண், 1ம் தேதி மதுரையை  சேர்ந்த 63 வயது ஆண், 13ம் தேதி மதுரையைச்  சேர்ந்த 65 வயது ஆண், 5ம் தேதி மதுரைச் சேர்ந்த  54 வயது பெண், 6ம் தேதி மதுரையை சேர்ந்த 82 வயது ஆண், 8ம் தேதி மதுரையை சேர்ந்த 73 வயது ஆண், 5ம் தேதி மதுரைச் சேர்ந்த 72 வயது ஆண், 8ம் தேதி மதுரையை சேர்ந்த 53 வயது பெண், 4ம் தேதி மதுரையைச் சேர்ந்த 28 வயது பெண்,

24ம் தேதி சென்னையைச் சேர்ந்த 68 வயது ஆண், 16ம் தேதி சென்னையைச் சேர்ந்த 65 வயது,12ம் தேதி சென்னையை சேர்ந்த 65 வயது பெண், 16ம் தேதி சென்னையை சேர்ந்த 62 வயது பெண் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை இறந்துள்ளனர். இவர்களின் இறப்பு நேற்றைய பட்டியலில் தான் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மதுரையில் 10 பேரும், சென்னையில் 4 பேரும்,   கோவையில் 2 பேரும்,  திண்டுக்கல், நெல்லை, திருப்பூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 20 பேர் நேற்றைய கணக்கில் சேர்த்துள்ளனர். சென்னையைப் போல மாவட்டங்களிலும் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளது தற்போது வெளியாகியுள்ளன.
இதனால் மேலும் பல மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து நாட்களில் அந்த மரணங்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்