SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனிமவளத்துறையில 1400 கோடி டீல் சில நாளிலேயே உடைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-02@ 04:21:18

‘‘இலவச மின் இணைப்பு கொடுத்தே லட்சாதிபதிகள் ஆகும் அதிகாரிகள் எங்ேக இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘செங்கல்பட்டு  மின் பகிர்மான வட்டத்தில் இலவச மின்சாரம் கேட்டு 600 விவசாயிகளுக்கு மேல் விண்ணப்பம் கொடுத்து இருக்காங்க. ஆனால் நிர்வாக அனுமதி வெறும் 235 பேருக்கு தானம்... இங்கே தான் லட்சத்தை கறக்க நினைத்த அதிகாரிகளின் மூளை நன்றாக வேலை செய்துள்ளது. மூன்றில் 2 பேருக்கு இலவச மின் இணைப்பு தர முடியாது. இதனால அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு... விலைபேச ஆரம்பிச்சுட்டாங்க. ஐந்து லட்சத்தில் தொடங்கி 2 லட்சம் வரை இடத்துக்கு செல்வாக்குக்கு ஏற்ப இலவச மின்சாரத்துக்கு பணத்தை கறக்கிறாங்களாம். இதுல மதுராந்தகம் பகுதியில் விவசாயிகள் அதிகமான இணைப்பு கேட்டு அளித்துள்ள மனுதாரர்களை அழைத்து பேரம் பேசறாங்களாம்... முடியாதவங்க சில ஆயிரம் மட்டுமே தர முடியும்னு சொல்லி ஒதுங்கறாங்களாம்... செல்வாக்குள்ளவர்கள் கடைசியாக விண்ணப்பித்து இருந்தாலும் மின் இணைப்பை ஈசியாக வாங்கிட்டாங்களாம். இதனால வழக்கம்போல ஏழை விவசாயிகள் இணைப்பு பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதுபற்றி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு ேபாயும் பலனில்லையாம். இதனால்  அதிகாரிகள், தங்கள் இஷ்டத்துக்கு செயல்பட்டு விவசாயிகளிடம் பணத்தை கறந்துள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கனிமவளத்தில் கமிஷன் கை மாறாததால்... சிக்கலில் ஒரு விஐபி மாட்டியிருக்கிறாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாடு முழுவதும் சவுடுமண், கிராவல், ஜல்லி குவாரிகளுக்கு சிறப்பு அனுமதி கேட்டு ஒருவர்  மேலிட சிபாரிசுக்கு போனாராம்... ₹1,400 கோடி பேசியதை அடுத்து சில நாளில் கனிமவளங்களை எடுக்க உத்தரவு வந்ததாம். இதையடுத்து கனிம வளங்கள் இரவு, பகல் பாராமல், ராட்சத இயந்திரங்கள் மூலம் அள்ளப்பட்டு வெளிமாநிலங்களுக்கு போனது. பேசியபடி கமிஷன் தராமல் விஐபி தரப்புல இழுத்தடிச்சாரு... அதுமட்டுமல்லாம, அந்த விஐபி உடல்நலக்குறைவுனு சொல்லிட்டு ரகசிய இடத்தில் பதுங்கிட்டாராம். இதையறிந்த மேலிடம் மணல் அள்ள தடை போட்டு விட்டதாம்... இதனால கடந்த ஒரு வாரமா தமிழகம் முழுவதும் மணல்குவாரி, செம்மண், ஜல்லி உள்ளிட்ட எந்த குவாரியும் இயங்கலையாம்... கோடி, கோடியா விஐபியிடம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கொடுங்க... இல்லைனா குவாரியை இயங்க அனுமதி வாங்கி கொடுங்கன்னு மிரட்டுறாங்களாம்... இதனால அந்த விஐபி கொஞ்ச நாளாகவே கப்சிப்னு இருக்கிறாராம்... வாங்கிய பணம் எங்கேனு கொடுத்தவர்கள் கேட்க... எடுத்த மணலுக்கு எங்கே கமிஷன்னு மேலிடம் கேட்க விஐபி தரப்போ... பதில் சொல்லாம நழுவி வருதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வழக்கை வைத்து வாழ்க்கை நடத்தும் காக்கிகள் யாரு... எந்த ஊரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்தில் குப்பம்னு முடியற பெயர்ல ஒரு காவல்நிலையம் இருக்கு. இந்த காவல்நிலையத்துல 3 ஸ்டார், 2 ஸ்டார், சிங்கிள் ஸ்டார்னு 31 காக்கிங்க பணியில இருக்குறாங்க. அதில் 2 ஸ்டார், சிங்கிள் ஸ்டார் காக்கிங்க மட்டும் 13 பேர் இருக்காங்களாம். அவங்கதான் ஸ்டேஷன்ல ஆல் இன் ஆல் அழகு ராஜாவாம். புகார் கொடுக்க வர்றவங்ககிட்ட, வழக்கு வேண்டாம்னு சொல்லியும் அதுல உள்ள நடைமுறை சிக்கல்களை சொல்லி பயமுறுத்தி அனுப்பிடறாங்களாம்... இதனால புகார்தாரர்கள் புலம்பிக்கிட்டே போறாங்க... அவங்கள குறிவைச்சு... பின்னாடியே போகும் புரோக்கருங்க, ஐயா இவ்ளோ கேட்டாரு, அவ்ளோ கேட்டாருனு கேட்குறாங்களாம். இதுல அடி தடி உள்ளிட்ட தகராறில் ஈடுபடுறவங்க பயந்துபோய் கேட்குறத கொடுக்குறாங்களாம். திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் பாதிக்கப்பட்டவங்க கேள்வி கேட்டா, மிரட்டுறாங்களாம்... சில நேரங்கள்ல கரன்சி வாங்குறதில்லையாம், மாறாக பக்கத்துல இருக்குற கடையில, பாக்கி இருக்குது, அதைகொடுத்துட்டு போன்னு சொல்றாங்களாம். இப்படியாக கசப்பான குப்பம் காவல்நிலையத்துல புரோக்கர்களை வச்சிகிட்டு காக்கிகள் சில்லறை பார்க்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரியில மருத்துவனை டீன் கொரோனாவை பார்த்து ரொம்பவே பயந்துட்டார் போல...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 150, 200 என எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகுதாம். மரணங்களும் நாளுக்கு நாள் எகிறுதாம். இந்த மரணங்களுக்கு ெகாராேனா ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும், மறுபுறம் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் குளறுபடிகளை அங்குள்ள சிலரே மனம் வெதும்பி புலம்பறாங்களாம். அதாவது கொரோனா வார்டில் பணி ஒதுக்கீட்டில் தொடங்கி, கவச உடை, கையுறை, முக கவசம் வழங்குவது வரை பாரபட்சம் பார்க்கப்படுகிறதாம். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருக்கும் சீனியர் டாக்டர்கள் பலர், கொரோனா வார்டுக்கு பணிக்கு நியமிக்கப்படுவதில்லையாம். கொரோனா வார்டுக்குள் செல்லும் ஒரு சில டாக்டர்கள் மட்டும் தான் வார்டுக்கு போய் நோயாளிகளை பார்க்கிறார்களாம். மற்ற டாக்டர்கள் யாரும் இதுவரைக்கும் வார்டுக்கு உள்ளே கூட போனதில்லையாம். மற்ற மருத்துவக்கல்லூரிகளில் முதல்வர் பொறுப்பில் இருப்பவர்கள், கவச உடை உள்ளிட்ட பாதுகாப்புடன் வார்டுக்குள் செல்கிறார்கள். ஆனால் இங்கு டீன் இதுவரைக்கும் கொரோனா வார்டுக்குள் சென்றது கிடையாதாம். இதனால் கொரோனா வார்டுக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உள்ளதாம். முறையான கவனிப்பு இல்லாமல் தான் இறப்புகள் அதிகரிப்பதாக மாவட்ட உயர் அதிகாரிக்கும் தகவல் போய் இருக்கிறது. கொரோனா வார்டுக்குள் நான் எப்டி ெசக் செய்ய முடியும்... இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேறு பிளான் வைச்சு இருக்கேன்னு ெசால்றாராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்