SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடஒதுக்கீடு வழக்கைப்போல இன்னல் தரும் கல்வி கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

2020-08-02@ 04:13:00

இந்தியாவில் உள்ள பிறமொழிகள், பிற தேசிய இனங்கள், பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்கள்  அனைத்தையும் சிதைக்கும் பேராபத்தை உருவாக்கி
யிருக்கிறார்கள்.

சென்னை: இடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக்  கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமூகநீதிக்கான போர்க்களத்தில் சற்றும் சளைக்காமல் போரிடும் திமுக,இம்முறையும் சட்டரீதியான வெற்றியை ஈட்டியிருக்கிறது. இது நமக்கான தனிப்பட்ட வெற்றியல்ல; பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வெற்றி. ஒடுக்கப்படுவோர் யாராயினும், அது எவ்வகையிலாயினும், அதற்கு எதிராகப் போராடுகின்ற இயக்கமாக திமுக இருக்கிறது.

சமூகநீதி சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் வழங்கிய பாராட்டுகள் உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது என்றாலும், அதற்கு முற்றிலும் உரியவர்கள்,  உயிர் நிகர்த் தலைவர் கலைஞரின் அன்பு தொண்டர்களான நீங்கள் தான். கட்சி பெறுகின்ற எந்தவொரு வெற்றியும் தொண்டர்களின் உழைப்பெனும் கழனியில்  உணர்வெனும் உரமெடுத்து ஓங்கி  விளைவதுதான். எனவே, மத்திய அரசின் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடங்கள்  தொடர்பான வழக்கில் திமுக பெற்றுள்ள வெற்றியை மக்களிடம் எடுத்துரைத்து, சமூக நீதியில் தமிழகம் எப்போதும் ஒன்றிணைந்து நிற்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

நாம் நடத்துகின்ற ஜனநாயகப் போர், ஒரு களத்துடன் முடிந்துவிடுவதில்லை. அடுத்தடுத்த களங்களும் உடனுக்குடன் தொடர்கின்றன. இப்போது புதிய கல்விக் கொள்கை மூலம், மாநில உரிமைகளைப் பறித்து  ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய ஆட்சியாளர்கள் எடுத்துக்கொண்டு, மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியை மட்டுமின்றி சமஸ்கிருதத்தையும் திணித்து, இந்தியாவில் உள்ள பிறமொழிகள், பிற தேசிய இனங்கள், பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்கள்  அனைத்தையும் சிதைக்கும் பேராபத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், அதில் மாநில அரசுகளுக்கு மிச்சமிருக்கும் அதிகாரத்தையும் முழுமையாகப் பறித்து, பாடத்திட்டங்கள் முதல் பல்கலைக்கழக நிர்வாகம் வரை அனைத்தையும் மத்திய அரசே தன் கட்டுப்பாட்டில் சுவீகரித்து வைத்துக்கொள்ளும் என்பது, நமது அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது விழும் கோடரி வெட்டு.

இந்த ஆபத்துகளை உணர்ந்துதான் எதிர்க்கட்சியான திமுக புதிய கல்விக் கொள்கையைத் துணிந்து எதிர்க்கிறது. எதிர்க்கட்சியான திமுகவும் தோழமை இயக்கங்களும் புதிய கல்விக் கொள்கையின் பேராபத்தை உணர்ந்து அதற்கு எதிர்வினையாற்றும் நிலையில், மாநில உரிமைகளை மொத்தமாகப் பறிக்கின்ற வகையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இந்தக் கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாட்டை ஆளுகின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறது என்பது ஆள்வோருக்கும் தெரியவில்லை; பொதுமக்களுக்கும் அவர்களின் நிலைப்பாடு புதிராக இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டிய ஆட்சியாளர்கள் வாய்மூடிக்  கிடக்கின்ற நிலையில், பொதுமக்களின் மனதை ஆட்சி செய்கின்ற திமுக தனது தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று, தமிழகத்தின் கல்வி நலன் காக்கின்ற முயற்சியை மேற்கொள்ளும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத  பிற மாநில முதல்வர்கள், அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும். இந்தியாவைச் சிதைக்கும் பேரபாய சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம். இடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக்  கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம். சமூக நீதி காப்போம். சமத்துவக் கல்வி வளர்ப்போம்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்