SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12 லட்சம் கட்டணம் வசூலித்த புகார் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து: சுகாதாரத்துறை உத்தரவு

2020-08-02@ 01:08:55

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு 12 லட்சம் கட்டணம் வசூலித்த பி - வெல் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்ததாக தொடர்ந்து புகார் எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள பி- வெல் மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்கு 12 லட்சம் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சுகாதாரத்துறை மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்தறை வெளியிட்டுள்ள அறிக்கை : தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து கொரோனா நோய்க்கான சிகிச்சைகளை மக்களுக்கு வழங்கிட அனுமதி அளித்து வருகிறது. சிகிச்சைகள் தொடர்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி- வெல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு 12,20 லட்சம் வசூலிக்கப்பட்ட விவரம் உறுதிசெய்யப்பட்டது. மேலும், தனியாரது சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.

கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பி - வெல் மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்