SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நுண்ணறிவு பிரிவு போலீசாரை குற்றம்சாட்டிய உதவி கமிஷனரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-08-01@ 00:18:28

‘‘எல்லா பிரச்சனைகளுக்கும் நுண்ணறிவு பிரிவு போலீசார் தான் காரணம்னு  போலீசாருக்கு வகுப்பெடுத்த உதவி கமிஷனர் பற்றி தெரியுமா..’’ என ஆரம்பித்தார் விக்கியானந்தா.
 ‘தெரியாதே.. விரிவா சொல்லு...’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘சென்னை எழும்பூரில் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு உள்ளுறை பயிற்சி மையம் என்ற வகுப்பை  போலீஸ் உயர் அதிகாரிகள்   எடுத்துட்டு வராங்க. இதுல 3 நாட்கள் வகுப்பு எடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 60க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துக்குறாங்க. போலீசாரின்  மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் சொல்லி தராங்க. இதுல ஒரு உதவி கமிஷனர் வந்து வகுப்பு எடுக்கிறார். அவர் போலீசார் கிட்ட பேசும் போது நம்முடைய எல்லா மன உளைச்சலுக்கும் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தான் காரணம் அப்படின்னு சொல்லி வகுப்பு எடுக்குறாரு. இதைக் கேட்டு போலீசாரே ஒரு நிமிடம் ஆடிப் போயிட்டாங்க. நுண்ணறிவு பிரிவு என்பது போலீசார் தவறு செய்தால்  அதை அவர்களின்  உயர் அதிகாரிகளுக்கு  தெரியப்படுத்தும்  ஒரு பிரிவு. இப்படி ஓப்பனா எல்லா பிரச்சனைகளுக்கும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தான் காரணம்னு பேசி போலீசாரிடையே தவறான விதையை விதைக்கிறார் உதவி கமிஷனர்னு சொல்றாங்க.
   இதைக்கேட்ட பல போலீசார் வெளியே வந்து நுண்ணறிவு  போலீசாரை பார்த்து கலாய்க்கிறாங்களாம்  இதுல என்ன கொடுமைனா தப்பா பேசின அந்த உதவி கமிஷனர் ஏற்கனவே 12 வருடம் அதே நுண்ணறிவு பிரிவுல தான்   வேலை பார்த்திருக்காரு. ஏற்கனவே கொரோனா பணியால்  மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள  நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தற்போது உதவி கமிஷனரின் இந்த குற்றச்சாட்டால் மேலும் நொந்துபோய் இருக்காங்களா
‘‘விருதுநகர் மாவட்டத்துல கொரோனா பரிசோதனைல குளறுபடினு சொல்றாங்களே.. அது என்ன விஷயம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘விருதுநகர் மருத்துவக்கல்லூரி லேப்புல தான் கொரோனா பரிசோதனை நடக்குதாம்... அங்க சாதாரணமாக 19 சதவீதம் வரை பாதிப்பு காட்டினாங்களாம். திடீர்னு கடந்த ஜூலை 11ல இருந்து 100க்கு 43 சதவீதம் வரை கொரோனா பாசிட்டிவ் காட்டி வந்தாங்களாம்... இதனால பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துச்சாம்... டெஸ்ட் கொடுத்த எல்லாத்தையும் பிடிச்சு, மருத்துவமனை, தனிமை முகாம்களில் தங்க வைச்சாங்களாம்... இதனால கொரோனா பாதிப்புல மாநிலத்துலயே, விருதுநகர் 2வது இடத்துக்கு வரை போய்ருச்சாம்... மக்கள் தொகை, டெஸ்ட் எண்ணிக்கை குறைவா இருக்குறப்ப எப்படி இப்படி வருதுன்னு யாருமே கண்டுக்கலையாம்... மாநில அளவுல 10 சதவீத பாசிட்டிவ் வரும்போது, விருதுநகருல மட்டும் விறுவிறுன்னு ஏறுதேன்னு மாநில சுகாதாரத்துறையே மண்டை காய்ஞ்சுருச்சாம்...
மதுரையில இருந்து அதிகாரிங்க போய் விசாரிச்சப்பத்தான், ‘‘நாங்க கட்-ஆப் வேல்யூல 15 சதவீதம் தெரிஞ்சாலே, பாசிட்டிவ்ன்னு சொல்லிடுவோம்ன்னு சொன்னாங்களாம்... பதறிப்போன அதிகாரிங்க, ‘‘என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களேம்மா... 35 சதவீதத்துக்கு மேல போனா தான் பாசிட்டிவ்ன்னு சொல்லணும்னு விளக்கம் கொடுத்துருக்காங்களாம்... இதற்கப்புறம்தான் இப்ப 2 நாளா பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததாக காட்டப்படுகிறதாம்.. பாசிட்டிவ்னு சொல்லி நல்லா இருந்தவங்களை எல்லாம், கூட்டிட்டு போய் லட்சம் லட்சமாக செலவழிக்க விட்டாங்களே... என்று மாவட்ட மக்கள் தரப்பில் புலம்பல் சத்தம் ஓவரா கேட்குதாம்... தவறுக்கு காரணம் டெக்னீஷியனா அல்லது வேறு யாருமா என்ற கோணத்துல சுகாதாரத்துறை விசாரணையும் பரபரப்பாக போய்ட்டு இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.ம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘கல்லா கட்டும் சூப்பர்வைசரை பற்றி சொல்றதா சொன்னியே.. அது என்ன மேட்டர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘மாங்கனி மாவட்ட மண்டல நகர் ஊரமைப்பு ஆபீசில் பல தில்லாலங்கடி வேலை நடக்குதாம். இந்த ஆபீசில் இருக்கிற சூப்பர்வைசரு கல்லா கட்டுறதுல செம கில்லாடி. அதிகாரிகளுக்கு தெரிஞ்சா, பாதி கொடுத்து கவர் பண்றதுலயும் கெட்டிக்காரராம். ெகாரோனா காலத்துல கூட மனைக்கு அனுமதி கேட்டு, ஆபீசுக்கு வர்றவங்க கிட்ட, அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை விட அதிகமாக கேட்கிறாராம். முக்கியமாக கலெக்‌ஷனுக்கு சொந்த கார்ல தான் போவாராம். புரோக்கர்களை அப்ரோச் பண்ண, ஆபீஸ் பக்கத்துலேயே அப்பார்ட்மென்டில் ரூம் போட்டு வச்சிருக்காராம். அய்யாவை பொறுத்தவரை அரசு சம்பளத்தை விட, அடுத்தவர்களிடம் வாங்கும் கமிஷன் தாங்க அதிகம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’
 ‘‘தமிழகத்துல கொரோனா பாதிப்பால, ஊரடங்கு சில தளர்வுகளோட அமல்ல இருக்குது. அதேபோல குயின்பேட்டை மாவட்டத்துலயும் அமல்ல இருக்குது. கடைகள் திறக்க நேரக்கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க. இதனால மக்கள் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள கடைகள்ல, பொருட்களை வாங்கி பயன்படுத்துறாங்க. இந்த நேரத்துல சில கடைக்ககாரங்க, தரமில்லாத பொருளையும், காலாவதியான பொருளையும் விற்பனை செய்றதா புகார் சென்றது.
இதையடுத்து புட் ஆபிசர்ஸ் குயின்பேட்டை மாவட்டத்துல கடந்த சில நாட்களுக்கு முன்னாடி ரெய்டு போனாங்களாம். அந்த ரெய்டுல, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்கு வச்சிருந்தது தெரியவந்துச்சாம். அதனை அதிகாரிங்க பறிமுதல் செஞ்சிருக்காங்க.
உடனே அந்த அதிகாரிக்கு, ஆறு காடான நகர் ஆட்சியில இருந்து உயர் அதிகாரி செல்போனில் தொடர்புகொண்டு, ‘என்ன சார் இது, கொரோனா டைம்ல போய் பிளாஸ்டிக் பறிமுதல் செய்றீங்க, விடுங்க சார்’ என்று கூலாக பேசினாராம். நடவடிக்கை எடுக்குற இடத்துல இருக்குற அதிகாரியே இப்படி பேசுறாங்களேன்னு, ரெய்டுக்கு போன அதிகாரி அதிர்ச்சியடைஞ்சு, என்ன செய்றதுனு தெரியாம புலம்பி தவக்கிறதா, மக்கள் பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.                    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2020

  20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்