SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஜூன் மாதத்தில் மரணங்கள் அதிகரிப்பு: கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 1,938 மரணங்கள் பதிவு: காரணத்தை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

2020-08-01@ 00:10:49

சென்னை : சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த மரணங்களை விட இந்தாண்டு ஜூன் மாதத்தில் 1,938 மரணங்கள் அதிகமாக பதிவாகியுள்ளது.  எனவே, இது தொடர்பான காரணத்தை சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. சென்னையில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வந்தது. தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். பலர் தீவிர அறிகுறிகளுடன் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலர் சில மணி நேரங்களில் மரணம் அடைந்தனர்.  குறிப்பாக, ஏற்கனவே பல்வேறு இணை நோய்களுடன் உள்ளவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் உயிரிழந்தனர்.

இவ்வாறு மரணம் அடைந்தவர்களை கொரோனா மரணங்களின் கணக்கில் சேர்க்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு குழு  அமைத்தது. இந்த குழு அறிக்கையின்படி மார்ச் 1 முதல் ஜூன் 3ம் தேதி வரை விடுபட்ட 444 மரணங்கள் கொரோனா மரணங்களின் பட்டியலில் சேர்ப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் ஏற்பட்ட மரணங்களை விட இந்தாண்டு ஜூன் மாதம் 1,938 மரணங்கள் அதிமாக நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.

இதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் 5,552 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தாண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் 4,216 மரணங்கள் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு மே சென்னையில் 6,544 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு மே 5,218 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதேபோன்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5,320 மரணங்கள் சென்னையில் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு 7,168 மரணங்கள் பதிவாகி உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடந்தாண்டை விட இந்தாண்டு குறைவான மரணங்கள் பதிவாகி இருந்த நிலையில், ஜூன் மாதம் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1,938 மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது.

எனவே இந்த மரணங்களின் காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
ஊரடங்கு அமலில் இருந்த காலக்கட்டத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துகள் அதிகம் நடைபெறவில்லை. இதனால்தான் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், ஜூன் மாதம் மட்டும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளின்படி ஜூன் மாதம் சென்னையில்  மரணங்களின் எண்ணிக்கை  அதிகரித்தது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ஜூன் மாதத்தில் நிகழ்ந்த கொரோனா மற்றும் மற்ற மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

உலக சுகாதார நிறுவனம் சொல்வது என்ன
கொரோனா பாதிப்பு தொடர்பாக உண்மையான நிலையை அறிந்து கொள்ள கடந்த ஆண்டு இதே மாதம் மற்றும் வாரத்தில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை மற்றும் இந்தாண்டு நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

2019ம் ஆண்டுமரணங்கள்
ஏப்ரல்    5,552
மே    6,544
ஜூன்    5,230

2020ம் ஆண்டு மரணங்கள்
மாதம்    மொத்த
மரணம்    கொரோனா
மரணம்
ஏப்ரல்     4,216    21
மே    5,218    267
ஜூன்    7,168    1,024


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்