ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் மாற்றம்: முதல்வர் அறிவிப்பு
2020-08-01@ 00:09:31

சென்னை: ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயரை மாற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1ன் கீழ், ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.
எனவே, ஆலந்தூர் மெட்ரோ என்பது ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்றும், சென்ட்ரல் மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்றும், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ (கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம்) என்பது ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ’ என்றும் பெயர் மாற்றங்கள் செய்து ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல : ராமதாஸ் வேண்டுகோள்
கோவில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?: வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!!
அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள், தேர்வுகள் : தமிழக அரசு அதிரடி!!
இரவு நேர பொது ஊரடங்கு ரயில்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்