SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊரு ரெண்டு பட்டதால பதவி கைமாறிப் போன கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2020-07-31@ 00:55:50

‘‘ஆளுங்கட்சி விவகாரம் என்ன இருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அதிமுக தேர்தல் வியூகத்துல மாங்கனி புறநகர் மாவட்டத்தை ரெண்டா பிரிக்க முடிவு செஞ்சாங்களாம். இதில் ஒரு மாவட்ட செயலாளர் பொறுப்பு தங்கள் அணிக்கு வேணும்னு முக்கியஸ்தர் ஒருவர் கேட்டாராம். தனது ஆதரவாளர்களில் முக்கியமாக உள்ள சிகப்பானவருக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியா இருக்காராம். கூவத்தூர் முகாமில் இருந்து வெளியேவந்து ஆதரவு பெருக அவர் தான் காரணமாம். ஆனா அதுக்கு வாய்ப்பு இல்லாம போச்சாம். ஆனால் தேன் இ மாவட்டத்தில் தனது ஆதரவாளர் ஒருவருக்கு பதவி வேண்டும் என சேலம் தரப்பு கேட்டாராம். அதனால தான் இரண்டு மாவட்டத்திலேயும் மாவட்ட செயலாளர்கள் மாற்றத்தை நிறுத்தி வைச்சு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கொரோனா காலத்தில் காணாமல் போன காளைக்கு பெயர் போன மாவட்ட எம்எல்ஏவை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக பல ஆயிரம் பேர் வேலையிழந்து தவிக்கின்றனர். தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கியும், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கியும் வர்றாங்க. இலையில் நின்ன ஜெயிச்ச பின்னலாடை மாவட்டத்தில் காளைக்கு பெயர் போன தொகுதியை சேர்ந்த மக்கள் பிரநிதியை காணவில்லையாம். கொரோனா நிவாரணமாக, தொகுதி மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மக்கள் பிரதிநிதி அலுவலகத்துக்கும் வருவதே இல்லையாம்...

அதற்கு பதில் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி நடக்கும் அரசியல் மாநாடுக்காக, தொகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை, காம்பவுண்ட் சுவர் உள்ளிட்ட இடங்களில் சுயவிளம்பரம் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக ஓட்டு போட்டவங்க புலம்பறாங்க... பல லட்சம் செலவு செய்து சுவர் விளம்பரம் எழுதும் மக்கள் பிரதிநிதி தனது தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தலைமறைவாக இருப்பது, ஊர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கட்சிக்காரர்களே சொல்றாங்க.. இன்னும் 5 மாதம் கழித்து நடைபெற உள்ள மாநாடுக்கு இப்போதே பல லட்சம் பணம் செலவழித்து சுவர் விளம்பரம் வரைகிறார். ஏழை, எளிய மக்களை எட்டிக்கூட பார்க்க மறுக்கிறார்’ என மற்றொரு புறம் தொகுதி மக்கள் புலம்பறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பதவி கை மாறிப்போச்சுனு இலை கட்சிக்காரங்க புலம்பறாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரை நியமிக்கும் பணியை இலைகட்சி தலைமை தொடங்கிச்சாம். பிரச்னையே இங்கே தான் ஸ்டார்ட் ஆகுது. மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளராக வரவேண்டும் என இலைகட்சி பூம்புகார் மக்கள் பிரதிநிதி தீவிரம் காட்டி வந்தார்.

கூடுதல் தகுதியாக இரண்டு முறை எம்எல்ஏவாக இருப்பதால் மாவட்ட செயலாளர் பதவி எனக்கு தான் தரணும்னு ஒத்தை காலில் நின்றாராம். இதுபோல் மயிலாடுதுறை மக்கள் பிரதிநிதியும் தனக்கு தான் மாவட்ட செயலாளர் பதவி வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தாராம்... இது போதாது என்று சீர்காழியில் உள்ள இலையின் முக்கிய தலை நான் தான். இதனால் எனக்கு தான் மாவட்ட செயலாளர் பதவி தரவேண்டும் என தலைமையிடத்தில் கறாராக கூறிவிட்டாராம்... இவர்களை தொடர்ந்து முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும் தனி கார், ஆட்கள், தினசரி போன்.. லகரங்களுடன் ரெடியாகவே இருந்தாங்களாம்.

ஆனால் இலைகட்சி தலைமை பூம்புகார் மக்கள் பிரதிநிதிக்கு மாவட்ட செயலாளர் பதவியை வழங்க முன்வந்ததாம்... இதனை அறிந்த மற்ற மக்கள் பிரதிநிதிகள் எங்களில் யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள்... ஆனால் பூம்புகாரரை புறக்கணிக்க வேண்டும் என்று தனித்தனியாக சொன்னாங்களாம். மேலும் போர்க்கொடியும் தூக்கினாங்களாம்... இலை தலைமையும் இந்த ஒட்டு மொத்த குரூப் பாலிடிக்சை... பாலிடிக்ஸ் மூலம் காலி செய்ய பிளான் போட்டதாம். அதன்படி, திடீர் திருப்பமாக மயிலாடுதுறை நகர செயலாளருக்கு தான் மாவட்ட செயலாளர் பதவி என இலை கட்சி தலைமையிடம் அறிவித்ததாம்...

தலைமையின் இந்த அறிவிப்பால் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டி போட்ட 3 எம்எல்ஏக்களும் அதிர்ந்து போனாங்களாம். இலைக்கட்சிக்குள் கோஷ்டி பூசலை தவிர்க்கவே நகர செயலாளருக்கு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியதாக கட்சியினரிடையே பேசிக்கிறாங்களாம்... இதனால் 3 பேரும்... நாம ரெண்டு பட்டோம்... யாரோ ஒருத்தர் வந்து மாவட்ட செயலளர் பதவியை பறிச்சுட்டு போயிட்டாரு என்று போன் போட்டு ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் செல்லிட்டு வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

 • singapore-robo23

  கொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ!: சிங்கப்பூரில் மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்