SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லா கட்டும் கடைகளாக பார்த்து பாக்கெட் நிரப்பும் அதிகாரியின் தந்திரத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2020-07-30@ 00:31:24

‘‘கொரோனா காலத்துல டியூசன் மூலம் வருமானம் ஈட்ட ஒரு ஆசிரியர் விளம்பர தூதராக மாறின கதையை சொல்லுங்களேன்...’’என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா காலத்துல ஆன்லைன் கிளாஸ்ல வாத்தியாருங்க பிஸியா இருக்காங்க. ஆனா மாங்கனி மாநகரத்துல டியூஷனுக்கு மாணவர்களை பிடிக்க பல ஆசிரியர்கள் ஆளாய் பறக்கிறாங்க... கொரோனா காலத்துல சம்பளத்தை மட்டும் வைச்சு மெய்ன்டன் பண்ண முடியாது என்பதால... டியூசனையே பலரும் நம்பி இருக்காங்களாம். அந்த வகையில மாங்கனி மாநகரில் ஆள்பிடிக்க பெரும் போட்டி நடக்குதாம். இதுக்காக வாத்தியார் ஒருத்தரு போட்ட பிளான் தான் ஹாட் டாபிக்கா போயிட்டு இருக்கு.

பிளஸ் 2 கடைசி பரீட்சைக்கு ஆப்சென்ட் ஆனவங்களுக்கு, ரெண்டு நாளைக்கு முன்னாடி மறு தேர்வு நடந்துச்சு. இந்த விடைத்தாள் திருத்தும் பணிக்கு, உதவிபெறும் பள்ளிக்கூட காமர்ஸ் வாத்தியார கூர்ந்தாய்வு அலுவலரா போட்டாங்க. இந்த தகவல் கெடச்சதும், இந்த தேர்வுக்கு வினாத்தாள் செட் பண்ணதே நான்தான். தேர்வு நடக்கும் போதே, கீ கிடெச்சுரும்னும், சகட்டு மேனிக்கு விளம்பரம் பண்ணிட்டு இருந்தாராம். ஜூனியரான இவருக்கு இந்த பொறுப்பு கொடுத்ததே அதிகம், இப்போ டியூசனுக்கு ஆள்பிடிக்க, வினாத்தாள் செட் பண்ணது நான்தான்னு ஊரு முழுசும் பரப்பிட்டு இருக்காரு... இப்படி சொன்னாலாவது டியூசன்ல நாலு பேரு சேர மாட்டாங்களானு நினைக்கிறாரு...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விழுப்புரத்துல வசூல் தூள் பறக்குதாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விழுப்புரம் நகரில் கொரோனா பாதிப்பு முன்னூறு கடந்த நிலையில், சமூக இடைவெளி மற்றும் கொரோனா விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்காம். இதனை கடைக்காரர்கள் முறையாக கடைபிடிக்கிறார்களா என்று கண்காணித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி வருவாய் அலுவலர் ஜெயமானவேல் தலைமையில் ஒரு குழு அமைத்து, தினசரி ஆய்வு செய்து வராங்களாம். நல்லா வியாபாரம் நடக்கிற கடையா பார்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கலை, விதிமுறைகளை கடைபிடிக்கலன்னு சீல் வைக்கப் போகிறோம் என்று மிரட்டுவதும், மாமூல வெட்டுனதும் நடையை கட்டருதும், என ஒரே புகார் எழுந்திருக்காம். இதையெல்லாம் கவலைப்படாம 8 பேர் கொண்ட வருவாய் அலுவலர் டீம், கொரோனா கால வசூல் வேட்டையில் ஈடுபட்டு வராங்களாம். ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் முதல் லட்சம் வரை மாமூல் வசூலாகுதாம். கலெக்டருக்கு கணக்கு கொடுப்பதற்கு, சிறிய பெட்டிக்கடைக்கு சீல் வைத்து வராங்களாம்...இப்படி கடையை மூடாமல் இருக்க கிடைத்த பணத்தை தன் பாக்கெட்டில் போட்டு நிரப்பிக் கொள்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பேசாதே.... என்று காக்கி அதிகாரி ஒருவர் யாருக்கு உத்தரவு போட்டு இருக்கார்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகர போலீசில் உயரதிகாரி, பலத்த ரெக்கமன்டோட சட்டம் ஒழுங்கு பதவிய பிடிச்சிருக்காராம். இரட்டை பதவி உயர்வில் இன்ஸ்பெக்டராக மாங்கனி நகருக்கு வந்த அவர், உதவி கமிஷனர், கூடுதல் துணை கமிஷனர் ஆகிய பொறுப்புகளில் இங்கேயே இருந்தாராம். துணை கமிஷனராக பதவி உயர்வு கிடைத்தவுடன் வேறு ஊருக்கு சென்றுவிடுவார் என எதிர்பார்த்தாங்களாம். ஆனால் மாங்கனி நகரிலேயே நியமிக்கப்பட்டதிலும் ஒரு நிபந்தனை இருக்காம். தேவையில்லாமல் வாயை திறக்க கூடாதுன்னு பூட்டு போட்டதாக பேசிக்கிறாங்க. இதன் காரணமாக பதவி ஏற்றதிலிருந்து மைக்கில் பேசவே இல்லையாம். அதே நேரத்துல அவர், தவறு செய்தது போலீசா இருந்தாலும் கண்டிக்காம விடமாட்டாரு என்பதால், கீழ் மட்ட மாமூல் அதிகாரிகள் கலக்கத்திலேயே இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இன்னொரு போலீஸ் மேட்டர் பிளீஸ்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது போலீசார் சரியான நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு எழுந்ததால் கடுங்கோபத்தில் காக்கி சரக உயரதிகாரி உள்ளாராம்.... திருவெறும்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி அவரது காதல் கணவர் உள்பட 4 பேர் மீது புகார் மனு அளித்தாராம்.. ஆனால் அந்த புகார் மனுவின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மனஉளைச்சலில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட எஸ்பி அலுவலகம் முன் நேற்றுமுன்தினம் தீக்குளிக்க முயன்றார்...

தகவல் அறிந்த சரக காவல் அதிகாரி இந்த சம்பவம் தொடர்பாக நேரிடையாகவே விசாரணையில் இறங்கினாராம்... மகளிர் போலீசார் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்தாமல் ஏனோதானோ என இருந்ததாக தெரியவந்ததாம்... ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சரக காவல் அதிகாரி, சம்பந்தப்பட்ட டிஎஸ்பி உள்பட அனைத்து போலீசாரையும் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து செம டோஸ் விட்டாராம்.. மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற நடவடிக்கை எடுக்க போவதாகவும் கூறினாராம்... வெலவெலத்து போன அனைவரும் கெஞ்சி கூத்தாடி மன்னிப்பு கேட்டதை அடுத்து தனது முடிவை சரக அதிகாரி மாற்றிக் கொண்டாராம்...

இளம்பெண்ணின் புகார் மீது காதல் கணவரை உடனடியாக கைது செய்த போலீசார் நடவடிக்கை எடுத்துவிட்டதாக சரக அதிகாரிக்கு உடனடியாக தகவல் அளித்தனாராம்.. ஆனால் இந்த வழக்கில் கைதான அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனையின் போது கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்டதால் போலீசார் அனைவரும் வெலவெலத்து போனார்களாம்... தொடாவிட்டால் திட்டு...தொட்டதால் கொரோனா தொற்று என்று காவலர்கள் வேதனையோடு சொல்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

 • modiji17

  பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்