SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த அலட்சியம் தொடர்ந்தால்...

2020-07-29@ 00:27:22

உலகை மிரட்டும் கொரோனா, சர்வதேச அளவில் ஆறரை லட்சம் உயிர்களை பறித்துள்ளது. இந்தியாவில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும், தமிழகத்தில் 3,500க்கு மேற்பட்டவர்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க, கைகளை அடிக்கடி சரியான முறையில் சுத்தம் செய்யவேண்டும். இது நம் கைகளில் வைரஸ் இருந்தால், அவற்றை கொன்றுவிடும். கண், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிர்க்க வேண்டும். நாம், பல பொருட்களை கைகளால் எடுத்து பயன்படுத்துவதால், கைகளில் வைரஸ் இருக்கக்கூடும். நாம் கண், மூக்கு மற்றும் வாயை தொடுவதன் மூலம் கைகளில் இருக்கும் வைரஸ் நம் உடலினுள் நுழைய வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியான இருமல், ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடருதல், 24 மணி நேரத்துக்குள் 3 அல்லது 4 முறை தொடர் இருமல், காய்ச்சல், உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாக இருப்பது, வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போவது போன்றவை கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஆகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தனிமையில் இருக்கவேண்டும். இது, கொரோனா வைரஸ் தொற்று, பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

மேற்கண்ட அறிகுறி உள்ளவர்களில், பெரும்பாலானவர்கள், முறைப்படி பரிசோதனை செய்ய முன்வருவதில்லை. அதனால், வீடுகள்தோறும் ெசன்று பரிசோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 12ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், தமிழக அரசு இந்த உத்தரவை முழுமையாக கடைபிடிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் உயிர் காக்கும் உத்தரவையே, சரியாக புரிந்துகொள்ளாமல் அலட்சியம் செய்யும் அ.தி.மு.க. அரசின் ெசயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொருபக்கம் திட்டமிடாத ஊரடங்கு. இதன்மூலம், சமூக விலகல் என்பது அடியோடு காற்றில் பறந்துவிடுகிறது. உதாரணமாக, நடப்பு ஜூலை மாதம் முழுவதும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால், முந்தைய நாளான சனிக்கிழமைதோறும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் கூடியது. சாதாரண பெட்டிக்கடை முதல் பெரிய கடைகள் வரை மக்கள் குவிந்ததால், சமூக விலகல் காற்றில் பறந்தது. இதுவே கொரோனா பரவலுக்கு காரணமாகிறது.

விரும்பிய பொருளை வாங்க, ஒருநாள் அவகாசம் அளிக்கும் மனப்பான்மை, மக்களிடம் இல்லை. ஊரடங்கு என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக மக்களை குவிய விடுகிறோேம என்ற குற்ற மனப்பான்மை அரசிடமும் இல்லை. இதுபோன்ற திட்டமிடாத செயல்கள் காரணமாக, கொரோனா தொற்று, கட்டுக்குள் அடங்க மறுக்கிறது. தொடர்ந்து உச்சம் தொடுகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் கொரோனா புதிய உச்சம் என்ற தலைப்பு செய்தி தற்போது தலைகீழாக மாறி, மாவட்டங்களில் புதிய உச்சம் என்ற நிலை உருவாகிவிட்டது. தடுப்பு நடவடிக்கை மற்றும் பரிசோதனை முறையில் அரசு தீவிரம் காட்டாமல் இருப்பதும், பேராபத்தை உணர்ந்து மக்கள் அதற்கேற்ப செயல்பட மறுப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். இந்த அலட்சியம் தொடர்ந்தால், கொரோனா பரவல் கட்டுக்குள் வராமலேயே போய்விடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்