ரூ.4,500 கோடி கையாடல் செய்த விவகாரம் : குற்றவாளி மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு!!
2020-07-28@ 17:04:22

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல், மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் நஜீப் ரசாக்கிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய முன்னணி கூட்டணி கட்சியை சேர்ந்தவரான நஜீப் ரசாக், தாம் பிரதமராக இருந்த போது 2015ம் ஆண்டு அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதியுமான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் கையாடல் செய்தார் என்பது குற்றச்சாட்டாகும். இந்த புகார் மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெரும் போராட்டங்களுக்கும் வித்திட்டது.
இதையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது 273 மில்லியன் டாலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவருடைய 408 வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர். அரசாங்க நிதியிலிருந்து தொகையை நஜீப்பும் அவருக்கு நெருக்கமானவர்களும் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசாங்க நிதியிலிருந்து சுமார் 10 மில்லியன் டாலர் தொகையை நஜீப் பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, ஊழல், மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் நஜீப் ரசாக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 5 ஆண்டு காலம் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில்,மொத்தம் 7 வழக்குகளில் நஜீப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் பதவியில் இருந்த போது தமது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுவிட்டதாக கோலாலம்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இது குறித்த குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களும் முழுமையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகவும், அவையனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார். பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தீர்ப்பை நஜீப் ரசாக் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
ரூ.4 500 கோடி கையாடல் விவகாரம் குற்றவாளி மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் 12 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்புமேலும் செய்திகள்
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது: 26.11 லட்சம் பேர் உயிரிழப்பு
பிறக்கப் போகும் குழந்தையின் நிறம் குறித்து சந்தேகித்தனர் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இனவெறி: கண்ணீர் மல்க மனம் திறந்த மேகன்
கினியா ராணுவ தளத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 600 பேர் காயம்
ஹெலிகாப்டர் விபத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் டசால்ட் மரணம்
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி தந்தது சீனா
கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : லிப்டில் சிக்கி 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பலி
இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி!: 9 லட்சம் பேர் வருகை...ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் மக்கள்.!!
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!