SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐ.நா.வையும் விடவில்லை

2020-07-25@ 07:28:20

கொரோனா என்னும் கொள்ளை நோய் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஊரடங்கை தளர்வு செய்த அமெரிக்கா மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு கொரோனா கோரதாண்டவம் ஆடி வருகிறது. ஐ.நா. பொதுசபை கூட்டம் உலக தலைவர்களின் நேரடி பங்கேற்பு இல்லாமல் செப்டம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது இதுவே வரலாற்றில் முதன்முறை. ஆண்டுதோறும் நியூயார்க் நகரத்தில் ஐ.நா பொது சபை கூட்டம் நடைபெறும். இதில் 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உலகுக்கு உரையாற்றுவார்கள். ஒருவாரத்துக்கும் மேல் கோலாகலமாக இந்த கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பது வழக்கம். அதிலும் இந்த ஆண்டு ஐ.நா பொது சபை கூட்டத்தின் 75வது ஆண்டு. செப்டம்பர் 15ம் தேதி பொதுசபை கூட்டம் தொடங்க வேண்டும். ஆனால் இந்த சிறப்பு வாய்ந்த கொண்டாட்டத்தை தடை செய்யும் வகையில் கொரோனா தனது கொடிய முகத்தை காட்டி அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தாக்கத்தில் நியூயார்க் முதலிடம் வகிப்பதால் ஐ.நா. பொதுசபை அரங்கு அமைந்துள்ள அப்பகுதியில் யாரையும் அனுமதிப்பதில்லை. எனவே, இந்த ஆண்டு பொதுசபை கூட்டத்தில் உலக தலைவர்கள் யாரையும் நேரடியாக பங்கேற்க செய்யாமல் வீடியோ மூலம் அவர்களது உரையை உலகுக்கு ஒளிபரப்பு செய்வது என்று தீர்மானித்துள்ளது.

அனைத்து உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு போன்றவை தங்கள் தலைவர், துணை தலைவர், இளவரசர் ஆகியோரின் உரையை முன்கூட்டியே பதிவு செய்து அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த மார்ச் மாதம் முதலே ஐ.நா பொதுசபை அரங்கில் செய்யப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஐ.நாவில் கடந்த 20ம் தேதி நடந்த மறுதிறப்பின் போது அதிகபட்சமாக 400 பேரை அரங்கில் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. அதேபோன்று 10 முதல் 40 சதவீத மக்களை அனுமதிக்கவும் தீர்மானித்துள்ளது.

ஐ.நா.வின் சிறப்புமிக்க 75வது ஆண்டு பொதுசபை கூட்டத்தை கொண்டாடவிடாமல் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோன்று சிறப்பு பிரகடன கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்த முடியவில்லையே என்ற ஆதங்கம் உறுப்பு நாட்டு தலைவர்களுக்கும் எழுந்துள்ளது. இந்த கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வரும் இந்திய பிரதமர் இந்த ஆண்டு காணொலி மூலம் தான் தனது உரையை நிகழ்த்த வேண்டியதிருக்கும்.
உலக தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும்போது பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடக்கும். இரு நாட்டுக்கிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இதற்கான வாய்ப்புகள் இந்த ஆண்டு ஐ.நா.பொது சபை கூட்டத்தில் இல்லை என்பது கூடுதல் வருத்தம். ஒவ்வொரு நாட்டு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பு ஆறுதலை தருகிறது. இருந்தாலும் கொரோனா ஐ.நா. கூட்டத்தையும் விட்டுவைக்கவில்லை என்பதே இந்த ஆண்டின் வரலாற்று சோகம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்