SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், சூரிக்கு ரூ.2,000 அபராதம் விதிப்பு!!

2020-07-23@ 16:08:39

சென்னை : ஊரடங்கு நேரத்தில் கொடைக்கானலில் தடையை மீறி உலா வந்ததாக நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பேக்குப்பாறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் என்பவரே இந்த புகாரை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், 'ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் இறப்பு, போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே இ - பாஸ் அனுமதியுடன் கோடைகானல் வரவேண்டும். குறிப்பாக சென்னையில் இருந்து கோடைகானல் வருவதற்கு கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.

ஆனால் நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்ட 4 பேர் கொடைக்கானலுக்கு வந்தது மட்டுமல்லாமல், பாதுகாக்கப்பட்ட பேரிஜம் ஏரிப்பகுதிக்கு சென்று மீன்பிடித்து கும்மாளம் போட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு பேரிஜம் ஏரிக்குள் நுழைந்ததாக போதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதை போன்று.நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு உடந்தையாக இருந்த வனத்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இதனிடையே நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்ட வனத்துறை தலா ரூ.2000 அபராதம் விதித்துள்ளது.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்