SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒர்க் அட் ஹோமில் தேவை கவனம் அழையாத விருந்தாளிகளாக வரும் கழுத்து, கண் வலிகள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

2020-07-19@ 01:52:41

கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மார்க்கெட்டிங் நிறுவனங்கள், வங்கிகள் உள்பட பலவும் நோய் தொற்று மற்றும் பல்வேறு செலவுகளை குறைக்கும் வகையில் தங்கள் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து அலுவக வேலை என்ற திட்டத்தை கடந்த மார்ச் இறுதி வாரம் முதல்  செயல்படுத்தி வருகின்றன.
ஆரம்பத்தில் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் இருந்ேத வேலை செய்வது சுகமாகவே இருந்தது. இன்றும் அது சுகமான ஒன்றுதான். ஆனால், அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள், மேஜை அமைப்பு மற்றும் கம்ப்யூட்டர், லைட்டிங் போன்றவவை பணியாளர்களின் வசதிக்கேற்பவே திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படுகிறது.

எனவே, அலுவலகத்தில் பணிபுரியும்போது பல்வேறு சிக்கல்கள் உடம்புக்கு ஏற்படாது. ஆனால், அதேபோன்று வீட்டில் அமைப்பதில் பொருளாதார ரீதியான சிக்கல், இடவசதி உள்பட பல்வேறு அம்சங்களை பார்க்க வேண்டும். ஒரு நாள் அல்லது ஒரு வாரம் என்றால் ஒர்க் ப்ரம் ஹோம் சரி. ஆனால், பல மாதங்கள் சாதகமில்லாத சூழலில் வீட்டில் இருந்து அலுவலக வேலை பார்ப்பது என்பது பல்வேறு நோய்களை உண்டாக்கிவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கழுத்து, தோல்பட்டை வலி: கம்ப்யூட்டர்களை நன்கு பார்க்கும் நிலையில் அதற்குரிய மேஜையின் மீது பணிபுரிய வசதியாக வைத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளாக நாளாக கழுத்து வலி, மற்றும் தோள்பட்டைகளில் வலியை உண்டாக்கும். அதை அப்படியே விட்டால் எலும்பு தேய்மானத்தில் கொண்டுவிடும்.

மேலும், நேராக உட்கார்ந்து வேலை செய்யாமல் சாய்ந்தபடி, கூனிகுறுகி உட்கார்ந்தபடி வேலை செய்தாலும் இந்த வகை வலிகள் வருவதற்கு சாதகமாக அமைந்துவிடும். இவற்றை தவிர்க்க உட்கார்ந்து வேலை செய்யும் மேஜை நம் எல்போவுக்கு ஏற்ற உயரத்திலும் மானிட்டர் நம் கண்களுக்கும் கழுத்துக்கும் அதிக பணிச்சுமையை எற்படுத்தாத வகையில் வைத்திருக்க வேண்டும். இதனால் நமது கழுத்து மற்றும் தோல்களுக்கு அதிக அழுத்தும் ஏற்படாது. வலிகள் தவிர்க்கப்படும். அதேபோல நாம் அடிக்கடி பயன்படுத்தும் பேனா, நோட்பேட் போன்ற  அடிக்கடி கையாளும் பொருட்களை கைக்கு எட்டி தூரத்தில் வைக்க வேண்டும். இதன் மூலமும் கழுத்து, ேதால்பட்டை வலிகள் தடுக்கப்படும்.

முதுகு வலி
கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்து பலமணி நேரம் பணி செய்பவர்களுக்கு பெரும்பாலும் முதுகு வலி ஏற்படுவது இயற்கை . கம்ப்யூட்டரில் டைப் செய்யும்போது முதுகை வளைத்து முன் வருவது வழக்கம். அப்போது முதுகில் உள்ள தசைகளில் பிடிப்பு ஏற்பட்டு வலி எடுக்கும். எனவே இதை தவிர்க்க முதுகின் கீழ் பகுதியில் சிறிய அளவில் தனியாக மெத்தை ஒன்றை வைத்தால் முதுகு வலியில் இருந்து தப்பிக்கலாம்.

கண்கள் அழற்சி
கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை பார்ப்பவர்கள் கண்கள் அதிகமாக மானிட்டரின் ஒளியால் கடுமையாக பாதிப்பு ஏற்படும். மேலும் கண்களில் ஈரத் தன்மை குறைந்து வறட்சியா, கண் அழற்சி, தலைவலி, மங்கலாக தெரிவதுபோன்ற பொதுவான பாதிப்பு ஏற்படும். நாம் வேலை செய்யும்  இடம் ஜன்னலுக்கு அருகிலும், இயற்கையான வெளிச்ச சூழலிலும் பார்க்கும்படி இருந்தால் கண்களுக்கு  ஏற்படும் அழற்சி குறையும். தொடர்ந்து கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இருப்பதை தவிர்க்க குறிப்பிட்ட கால அளவில் சிறிது ரிலாக்ஸ் செய்யலாம் இதனால் கண்களுக்கு மட்டுமல்ல மூளைக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும். மேலும் 20 நிமிடத்துக்கு 20 நொடிகள் 20 தூரத்தில் உள்ளதை பார்த்தால் கண்களுக்கு பார்வை குறைபாபாடு போன்றவை வராது என்று கண் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

முழங்கால்  தசைபிடிப்பு
நாற்காலியில் உட்கார்ந்து பணி செய்யும்போது பொதுவாக முட்டிக்கு கீழ் முழங்காலில்  ரத்த ஓட்டம் குறைவாகவே இருக்கும். எனவே கால்கள் தரையில் படும்படும் படி அமர்வதின் மூலம் தடைபடும் ரத்த ஓட்டம் சீராக தசை பிடிப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒரு முறை கால்களை மாற்றி மாற்றி உட்காருவது ரத்த ஓட்டத்தை சீராக  வைத்திருக்கும்.

மணிக்கட்டு வலி
ரிஸ்ட் என்று சொல்லக் கூடிய மணிக்கட்டு மற்றும்  கைகள் தான்  அதிக அளவு வேலைப்பளு காரணமாக மணிக்கட்டு பகுதியில் வலியை ஏற்படுத்தும். இந்தவலியை தவிர்க்க  கீபோர்ட்டில் முழுங்கை மற்றும் மணிக்கட்டை நேராக வைத்து பணி செய்தால் வலிகள் ஏற்படாது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்