ஜனநாயகத்தை காக்க ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்
2020-07-18@ 17:11:35

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார். பைலட்டுக்கு ஆதரவாக, 18 எம்.எல்.ஏ.,க்கள், ஹரியானா மாநிலம், மானேசரில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து, துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவி ஆகியவற்றிலிருந்து, சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரை ஆதரித்த இரண்டு அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.
இதனால் ராஜஸ்தான் அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி பரபரப்புக்கு மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பகுஜன் சமாஜ் கட்சிச் எம்.எல்.ஏக்களை காங்கிரஸில் சேர்த்ததன் மூலம் இரண்டாவது முறையாக எங்களை ஏமாற்றியுள்ளார். சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு காரியத்தைச் அசோக் கெலாட் செய்தார் என்பதும் தெளிவாகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மையை கணக்கில் கொண்டு, மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலமாக ஜனநாயகத்தை காக்க முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.. தேசிய அளவில் டிரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்
கடந்த ஆண்டைப்போன்று மீண்டும் அரங்கேறும் பரிபாதக் காட்சிகள்: நெடுஞ்சாலைகளில் நடக்கத் தொடங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள்
பலூன்களால் அலங்கரித்தல்... சாதனைகளை விளக்கும் உரை...புகைப்படம் எடுத்தல் :ஆக்சிஜன் லாரியை வைத்து அற்ப விளம்பரம் செய்த பாஜக!!
சித்தூரில் நோய் தொற்று அபாயம் நீவா நதியில் கலக்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சுழி தொகுதி தேர்தல் விவகாரம்!: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கும்பமேளாவில் பங்கேற்ற 19 கொரோனா நோயாளிகள் உத்தராகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் :பீதியில் வடஇந்தியா!!
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!