போலி வாக்குறுதிகளை தருகிறார் மல்லையா இந்தியா வருவதற்கு முன் செட்டில்மென்ட் செய்யட்டும்: உச்ச நீதிமன்றத்தில் தகவல்
2020-07-18@ 01:08:44

புதுடெல்லி: வங்கிகளிடம் வாங்கிய கடனை தீர்க்க செட்டில்மென்டாக 13,960 கோடி தர மல்லையா முன்வந்ததை ஏற்க மறுத்துள்ள மத்திய அரசு, மல்லையாவின் போலி வாக்குறுதிகளை ஏற்க முடியாது. வேண்டுமானால், இந்தியா வருவதற்கு முன்பே செட்டில்மென்ட் செய்யட்டும் என தெரிவித்துள்ளது. கிங்பிஷர் அதிபர் விஜய்மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. கடன், வட்டி அபராதம், வழக்குச்செலவு எல்லாம் சேர்த்து அவர் தர வேண்டிய தொகை இன்னும் அதிகம்தான். இருப்பினும், அவரிடம் இருந்து கடன் தொகையை மீட்க வங்கிகள் போராடி வருகின்றன.
லண்டனில் பதுங்கியுள்ள அவரை நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தனக்கு எதிரான வழக்குகளில் மல்லையா தோல்வி அடைந்துள்ள நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், அமலாக்க துறையின் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு மற்றும் வங்கிகள் தொடர்ந்த வழக்குகளில் இருந்து விடுபட 19,960 கோடி செட்டில்மென்ட் தருவதாக மல்லையா தரப்பில் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மல்லையா தரப்பில்ஆஜரான வழக்கறிஞர், மல்லையா வங்கிகளுக்கு செட்டில்மென்ட் தருவது பற்றி தெரிவித்தார். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘மல்லையாவை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இதில் இருந்து தப்பிக்க அவ்வப்போது இதுபோன்ற வாக்குறுதிகளை தருவது அவரது வழக்கமாக உள்ளது. இதில் நம்பகத்தன்மை இல்லை. இதை ஏற்க முடியாது. அவர் செட்டில்மென்ட் செய்வதாக இருந்தால், அதை அவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு செய்ய வேண்டும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
எங்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி டுவிட்.!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: விரைந்து குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து.!!!
நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி.!!!
மராட்டியத்தில் பிரக் ஃபார்மா கிடங்கில் ரெம்டெசிவிர் மருந்து பதுக்கல்; பதுக்கலுக்கு உதவும் பாஜக: மராட்டிய அரசு பகிரங்க குற்றச்சாட்டு
கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.. தேசிய அளவில் டிரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!