SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே வாரத்தில் உயிரை பறிக்கக் கூடிய புபோனிக் பிளேக் தொற்று அமெரிக்காவில் அணிலுக்கு உறுதி : மனிதர்களுக்கும் பரவும் ஆபத்தால் பீதியில் மக்கள்!!

2020-07-16@ 14:37:04

வாஷிங்டன் :  அமெரிக்காவின் கொலராடோவில் இருக்கும் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதியான செய்தி, மனிதர்களுக்கும் பரவும் என்ற அச்சத்தை அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.எந்த நாடும் இன்னும் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வரமுடியாமல் சிக்கி திணறி வரும் நிலையில், சீனாவில் பிளேக் நோய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் சின்கா நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது. இது மக்களை பீதியில் ஆழ்த்தியது.

 புபோனிக் பிளேக் தொற்றால் 24 மணி நேரத்தில் மரணம்

‘கருப்பு மரணம்’ என அனைவராலும் அழைக்கப்படும் புபோனிக் பிளேக் தொற்று மிகவும் ஆபத்தான ஒரு பாக்டீரியா நோயாகும். ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் 200 மில்லியன் மக்களைக் கொன்ற கறுப்பு மரணத்திற்கு இது காரணமாக இருந்தது,

‘யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா மூலம் ப்ளேக் தொற்று உருவாகிறது. இந்த வகை பாக்டீரியா விலங்குகளில் வாழும். குறிப்பாக அணில் போல காட்சியளிக்கும் ரோடண்ட் என்ற வகை விலங்குகளிலும், அதன் உடலில் உள்ள உண்ணிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படும்.

‘இந்த புபோனிக் பிளேக் தொற்று காரணமாக திடீரென அதிக காய்ச்சல், சளி, தலைவலி, குமட்டல் மற்றும் தீவிர வலி மற்றும் நிணநீர் முனையின் வீக்கம் ஆகியவை இரண்டு முதல் ஏழு நாட்களுக்குள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.நோய் தாக்கிய உடன் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் 24 மணி நேரத்தில் மரணமடைய நேரிடலாம்.

அமெரிக்காவில் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதி

*இந்த நிலையில், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டென்வரின் தென்மேற்கே உள்ள மோரிசன் நகரில் பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணிலை கண்டறிந்துள்ளனர்.

*புபோனிக் பிளேக் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கு மனிதர்களை கடித்தால், அதன் மூலம் நோய் பரவும் என்று ஜெபர்சன் கவுண்டி பொது சுகாதாரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் இரும்பும் பொது சுலபமாக மற்றொருவருக்கு பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*அதுமட்டுமல்லாமல் விலங்குகளிடம் இருந்து பரவும் புபோனிக் பிளேக் நோய், அவற்றை கடிக்கும் சிறு பூச்சிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக்கூடியது. நோய் வந்து இறந்த விலங்குகளில் இருந்து வெளியாகும் திரவங்கள் வாயிலாகவும் மனிதர்களுக்கு நோய் பரவக்கூடியது.

*இதுகுறித்து கூறிய பொது சுகாதார அதிகாரிகள், ' பிளேக் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் முன்கூட்டியே எடுக்காவிட்டால் இது மனிதர்களுக்கு பரவி மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். மேலும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் புபோனிக் பிளேக் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாவனது ஒரு வாரத்திற்குள் மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

*அமெரிக்காவில் கருப்பு மரணம் என அழைக்கப்படும் பிளாக் தொற்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கி இருந்தது கவனிக்கத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்