ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
2020-07-16@ 14:20:31

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டத்தில் குருசு கோயில் எனப்படும் புனித சந்தியாகப்பர் ஆலயத்திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் இன்று (16ம் தேதி) துவங்குகிறது. விழாவை முன்னிட்டு இன்று (16ம் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு வைகுண்டம் பங்குத்தந்தை கிஷோக் கொடியேற்றி சிறப்பு ஆசீர்வாத நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடத்தி வைக்கிறார். இருப்பினும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பக்தர்களின் வசதிக்காக www.cruzkovil.in. என்ற வெப்சைட்டில் கொடியேற்ற நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொடியேற்றத்தைதொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறும். ஆலயத்தின் முக்கியத்திருவிழாவான 10ம் திருவிழா வரும் 25ம் தேதி ஆலயத்திருத்தேர் திருவிழா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 26ம்தேதி காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை வைகுண்டம் குருசுகோயில் ஆலய பங்குத்தந்தை கிஷோக் செய்து வருகிறார்.
ஆன்லைனில் ஒளிபரப்பு
ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் ஆலய பங்குத்தந்தை கிஷோக் கூறுகையில், ‘‘மக்கள் நலனுக்காக மக்கள் இல்லாமல் இவ்வாண்டு திருவிழா நடக்கிறது. இந்தாண்டு உலக நாட்டையே அச்சுறுத்தும் விதமாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்காக சிறப்பு திருப்பலியும். கடலோர மீனவ மக்களுக்காகவும் தொழில் இல்லாமல் வறுமையில் வாடிவரும் மக்களுக்காகவும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. திருவிழா நாட்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுவதால் வீட்டில் இருந்தபடியே பக்தியுடன் பார்த்து நமது வேண்டுதலை இறைவனிடம் எடுத்துரைத்து அவர் ஆசியை பெற்றுக்கொள்வோம்’’ என்றார் அவர்.
மேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்