SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல!: மத நம்பிக்கை மீதான அவதூறு கருத்துக்கு நடிகர்கள் எதிர்ப்பு!!!

2020-07-15@ 11:12:05

சென்னை: இந்துக்களின் நம்பிக்கை மீது அவதூறு பரப்புவோர்களுக்கு எதிராக நடிகர்கள் பிரசன்னா, நட்டி ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.கறுப்பர் கூட்டம் என்ற யூ - டியூப் சேனல், இந்து கடவுளான முருகன் குறித்து அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் நட்டி என்னும் நடராஜ் சுப்பிரமணியம், சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்று கூறியுள்ளார். ஒருவரின் நம்பிக்கையை விமர்சிக்கிறேன் என்று கொச்சைப்படுத்துவது மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என்று நடிகர் பிரசன்னா கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள பிரசன்னா, அவ்வாறு செய்தால் மட்டுமே மதசார்பின்மை நாடாக விளங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, கந்தசஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்களை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் வரும் வியாழன் அன்று அறவழி கண்டன போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்து மதத்தையும், நம்பிக்கைகளையும் கறுப்பர் கூட்டம் யூ - டியூப் சேனல் கேலி கிண்டல் செய்து தரக்குறைவாக பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்செயலில் ஈடுபட்டவர்களை தேசவிரோத மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி, பாஜகவினர் வியாழன் அன்று போராட்டம் நடத்த வேண்டும் என்று எல்.முருகன் கூறியுள்ளார். காலை 10:30 மணிக்கு முருகப்பெருமான் படத்துடனும், கொடியுடனும் அவரவர் வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த அறப்போராட்டத்தில் முருக பக்தர்கள், இறை நம்பிக்கை உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்