மொத்தத்திலும், பாடவாரியாகவும் ஒரே மதிப்பெண் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகள் அசத்தல்
2020-07-15@ 02:42:08

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர்கள் இரட்டை சகோதரிகள் மான்சி, மான்யா. 9 நிமிட வித்தியாசத்தில் இவர்கள் பிறந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆஸ்டா பப்ளிக் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் வெளியான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருவரும் 95.8 சதவீதம் மதிப்பெண்ணை எடுத்துள்ளனர். அதில், பாடவாரியாகவும் இவர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்துள்ளதுதான் கூடுதல் ஆச்சர்யம். ஆங்கிலத்தில் சகோதரிகள் இருவரும் 98 மதிப்பெண், இயற்பியல், வேதியியல், உடற்கல்வி பாடத்தில் இருவரும் தலா 95 மதிப்பெண்கள் என ஒரே மாதிரி எடுத்துள்ளனர். இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்தது பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கு தெரியாமல் புதிய ஆப்களை பயன்படுத்தும் பாக். தீவிரவாத அமைப்புகள்: குறைந்த இன்டர்நெட்டிலும் வேகமாக செயல்படும்
முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீதான பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு: கேரள அரசு அதிரடி
ரூ.48,000 ஆயிரம் கோடியில் ராணுவத்துக்கு தேஜஸ் போர் விமானங்கள் விற்க ஒப்பந்தம்
விக்டோரியா மருத்துவமனையில் ஸ்டிக் உதவியுடன் நடக்கிறார் சசிகலா: மருத்துவர்கள் தகவல்
தடுப்பூசி பற்றி பரப்பப்படும் வதந்திகளை முறியடியுங்கள்: என்சிசி.க்கு மோடி வேண்டுகோள்
சாதனை பெண்களுக்கு வணக்கம் செலுத்துவோம்: பிரதமர் மோடி வாழ்த்து
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்