ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும்: முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு
2020-07-14@ 20:46:14

அமராவதி: ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். ரூ.15,000 வழங்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியம், டெல்லி, தமிழகம் போன்ற மாநிலங்களில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆந்திராவில் இதுவரை 36,221 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,144 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. இதுவரை 365 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் 16,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
‘மேடம் சீப் மினிஸ்டர்’ பட விவகாரம்; பாலிவுட் நடிகை மீது வழக்கு: அரியானா போலீஸ் நடவடிக்கை
கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பீதி
உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதி...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஆணுறுப்பை தொட சொன்ன இயக்குனர்: பாலிவுட் கவர்ச்சி நடிகை ‘மீடூ’-வில் பரபரப்பு புகார்
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் : பிரதமர் மோடி
வரும் 27ம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில், சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்.... அதிர்ச்சியில் அமமுகவினர்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!