SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதனாஞ்சேரி இளையநகரம் பெரிய கானாற்றில் அணை: திருப்பத்தூர் கலெக்டரிடம் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மனு

2020-07-14@ 14:37:40

வேலூர்: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில செயலாளர் பாலாறு வெங்கடேசன், திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருளிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி, இளையநகரம், மேல்குப்பம் ஊராட்சிகள் இணையும் மேற்குபகுதியில் வெள்ளைமலை துர்கம் மலையிலிருந்து ஐந்து காட்டாறுகள் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி வருகின்றன. மேலும் தாதன்கொல்லை, தரைக்காட்டில் இருந்து 2 காட்டாறுகள் உற்பத்தியாகின்றன. இவை ஒன்றிணைந்து இருளங்குத்து ஆலமரத்து கணவாயில் பெரிய கானாறு என்ற பெயரோடு இளைய நகரம், வடச்சேரி, மேல்சாணாங்குப்பம் வழியாக பாலாற்றை சென்றடைகிறது.

இந்த கானாற்றில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. அதோடு கானாற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு இக்கானாற்றில் உள்ள பழமையான தடுப்பணை உடைந்து தற்போது அதில் தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டுள்ளது. எனவே, இப்பகுதி விவசாயத்தை காக்கவும், குடிநீர் ஆதாரத்துக்காகவும் பெரிய கானாற்றில் இருளங்குத்து, தாதன்கொல்லை இடையில் நூறு அடி உயர அணையை கட்ட வேண்டும். மேலும் இக்கானாறு செல்லும் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளோடு மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஊராட்சிகளோடு, உதயேந்திரம் பேரூராட்சிக்கும் குடிநீர் ஆதாரமாக இது விளங்கும்.

அத்துடன் ஊத்துக்கொல்லை தடுப்பணைக்கும் இணைப்பு கொடுக்க முடியும். எனவே பெரியகானாற்றில் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இங்கு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் முழுமையாக உள்ளது. 2 டிஎம்சி தண்ணீரை தேக்கும் அளவுக்கு இடமும் உள்ளது. மேலும் போதுமான மழை பொழிவும், ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்தும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்