SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 நாளில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது; 5,71,460 பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்!!

2020-07-14@ 10:04:16

புதுடெல்லி:  இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 553 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,254லிருந்து 9,06,752ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174லிருந்து 23,727ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,53,471லிருந்து 5,71,460 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 25 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த ஜூலை 11 அன்று தொற்று எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்த நிலையில், 3 நாளில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.  

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,60,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,44,507ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,482ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798.   குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,567. தற்போது 48,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் - 166
ஆந்திர பிரதேசம் - 31103
அருணாச்சல பிரதேசம் - 387
அசாம் -16806
பீகார் - 17959
சண்டிகர் -588
சத்தீஸ்கர் - 4217
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 495
டெல்லி - 113740
கோவா - 2583
குஜராத் - 42722
அரியானா - 21894
இமாச்சல பிரதேசம் - 1243
ஜம்மு - காஷ்மீர்- 10827
ஜார்க்கண்ட் -3898
கர்நாடகா - 41581
கேரளா -8322
லடாக் - 1093
மத்திய பிரதேசம் - 18207
மகாராஷ்டிரா - 260924
மணிப்பூர் - 1626
மேகாலயா -318
மிசோரம் - 233
நாகலாந்து - 845
ஒடிசா -13737
புதுச்சேரி - 1468
பஞ்சாப் - 8178
ராஜஸ்தான் - 24936
சிக்கிம் - 192
தமிழ்நாடு - 142798
தெலுங்கானா - 36221
திரிபுரா -2080
உத்தரகாண்ட் - 3608
உத்தர பிரதேசம் - 38130
மேற்கு வங்காளம் - 31448

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-2179

மொத்தம் - 9,06,752


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்