SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி குழந்தைகளுக்கு வீடு தேடி சென்று சத்துணவு வழங்க திட்டம் உள்ளதா?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

2020-07-13@ 16:16:56

சென்னை: பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்க ஏதாவது திட்டம் உள்ளதா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் ஆர்.சுதா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்கள்  பயன்பெற முடியாத சூழல் இருப்பதாகும் அவர் கூறியுள்ளார்.

எனவே குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ஊட்டச்சத்து குறைவினால் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார். அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அரசாங்க வழங்கறிஞரும் ஆஜரானார். தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்