SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

2020-07-13@ 14:46:53

சென்னை: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம்  மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்  இடங்களில்  மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்தில் 9 செ.மீ மழையும், கேளம்பாக்கத்தில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், சென்னை விமான நிலையத்தில் 7 செ.மீ, மகாபலிபுரத்தில் 6 செ.மீ , சோழவரம் பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், தாம்பரம், நத்தம், செய்யூர், பூண்டி பகுதிகளில் தலா 4 செ.மீ  மழையும், பள்ளிப்பட்டு, தாமரைப்பக்கம் பகுதிகளில் தல 3 செ.மீ மழையும் அப்பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை

 ஜூலை 13(இன்று), கடலோர கர்நாடக பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 15 மற்றும் 16ம் தேதிகளில் கர்நாடகா, கேரள கடலோர பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 13 முதல் 17 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்