பல்லாவரம் அஞ்சல் குறியீடு எண் மாற்றம்
2020-07-11@ 00:25:16

சென்னை: தபால் மற்றும் மணியார்டர்களை விரைவாக பட்டுவாடா செய்ய ஏதுவாக பல்லாவரம் பகுதிக்கான அஞ்சல் குறியீடு எண் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை தெற்கு வட்டார அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பு: விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண தபால், மணியார்டர் ஆகியவற்றை விரைவாக பட்டுவாடா செய்வதற்கு ஏற்ற வகையில் பல்லாவரம் பகுதிகளின் அதிகார வரம்பும், அஞ்சல் குறியீடு எண்ணும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணா நகர் 1வது தெரு முதல் 5வது தெரு வரை, ராஜராஜேஸ்வரி அவென்யூ, ரெயின்போ காலனி முதல் மற்றும் 2வது தெரு, கங்கா தெரு, சாமிநாதன் தெரு ஆகிய பகுதிகளின் அஞ்சல் பட்டுவாடா, பழைய பல்லாவரம் - 600 117 அஞ்சலகத்தால் இதுவரை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த பகுதிகளுக்கான அஞ்சல் பட்டுவாடாவை இம்மாதம் 13ம் தேதியில் இருந்து மடிப்பாக்கம் 600 091 அஞ்சலகம் செய்ய உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் இனி 600 091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!!
வேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு..!!
நாளை மாலை 4.30 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..! முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
மாநகர செய்தி துளிகள்...
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
ஜெயலலிதா நினைவிட நிகழ்ச்சியில் பரிதாபம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாரடைப்பால் மரணம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!