SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டு வீரரை குறைக்க நீடா அம்பானி ஒப்புதல்

2020-07-08@ 02:25:35

இந்தியாவில் நடைபெறும் ஐஎஸ்எல், ஐ-லீக் உள்ளிட்ட முக்கியத் தொடர்களில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்க வேண்டும் என்று  இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை ஐஎஸ்எல் கால்பந்து தொடரை நடத்தும் புட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் லிட் நிறுவனத்தின் தலைவர் நீடா அம்பானி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த ஆண்டுக்கான வீரர்களை ஏற்கனவே தேர்வு செய்து விட்டதால், 2021-22 சீசனில் புதிய மாற்றத்தின் படி வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் அணிகள் தலா 7 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு போட்டியில், அவர்களில் இருந்து அதிகபட்சமாக 5 பேர் வரை இடம் பெற அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால் புதிய மாற்றத்தின்படி ஒரு அணி 6 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்துகொள்ளலாம். அந்த 6 பேரில் ஒருவர் கட்டாயம் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இது ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கட்டுப்பாடு. அதேபோல் ஆடும் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் காணலாம். அந்த 4 பேரிலும் ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்