மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலி
2020-07-08@ 01:20:59

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே பொன்னம்பல வாத்தியார் தெருவில் பஜ்ஜி கடை நடத்தி வருபவர் சிவராமகிருஷ்ணன்(53). வீட்டிற்குள் இருந்து ஜன்னல் வழியாக பஜ்ஜி விற்பனை செய்வதால் இந்த கடை ஜன்னல் பஜ்ஜி கடை என்று பெயர் பெற்றது. மயிலாப்பூர் பகுதி மக்கள் தவிர, கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பலர் இந்த கடைக்கு வந்து பஜ்ஜி வாங்கி செல்வார்கள். கடையை விரிவாக்கம் செய்யும் அளவிற்கு இடம் இருந்தாலும் அவர் ஜன்னல் அருகே சிறிய இடத்தில்தான் அமர்ந்து தொடர்ந்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சிவராமகிருஷ்ணனுக்கு கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 5ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். விதிகளின்படி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
சென்னையில் ஜூலை 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்
தந்தை நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா திருட்டு: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!