SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய மாவட்ட செயலாளர் நியமனத்துக்கு தடை போட்டு வரும் அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-07-06@ 01:18:53

‘‘சசிகலாவை வரவேற்க தயாராகி வர்றாராமே மாஜி அமைச்சர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்தில் சூரியன் மறையும் திசை தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், மாஜி அமைச்சராகவும் இருந்து வரும் அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சசிகலாவின் ஆசியோடு தொடர்ந்து அமைச்சராக இருந்து வந்தார். ஆனால் இம்முறை இவருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இவரை யாரும் கண்டுக்கிறதும் இல்லையாம். இதனால் மாஜி அமைச்சர் கடுப்பில் இருக்கிறாராம். மேலும் மாநகர் மாவட்டத்திற்குள் இவருக்கு எதிர்ப்பு வலுத்துட்டே வருதாம்... இதை தடுக்க தனது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க  மாஜி திட்டம் தீட்டினாராம்... 7 பகுதி செயலாளர்களை 11 பகுதி செயலாளர்களாக ஆக்க காய் நகர்த்தினாராம்...

ஆனால், மாவட்ட அமைச்சர்களோ இவரது திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுட்டாங்களாம்... இதனால் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கையில இறங்கியிருக்கிறாராம்... சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவர் தற்போதும் கிப்ட் நிர்வாகியுடன் நெருங்கிய தொடர்புல இருக்கிறாராம். விரைவில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்று தகவல் வர்றதால, அவரை வரவேற்க மாஜி அமைச்சர் தயாராகி வருகிறாராம். மேலும் தனது ஆதரவாளர்களிடம் சின்னம்மா வெளியே வரட்டும். அதற்கு பிறகு மீண்டும் நான் அமைச்சராவது உறுதி என்று சூளுரைத்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதிய மாவட்ட செயலாளருக்கு தடைபோட்டுட்டு இருக்காராமே ஒரு அமைச்சர்..’’ என்று அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.
‘‘விழுப்புரம் அதிமுகவில் ஒன்றியங்களை இரண்டாக பிரித்து, பொறுப்பு போட்டிருக்காங்க. அடுத்தகட்டமாக மாவட்ட செயலாளர் பதவி நியமனத்துக்கு தலைமை கடந்த 3 மாதத்துக்கு முன்பே முடிவெடுத்து அந்த பணியை மேற்கொண்டார்கள். இருக்கிற 6 தொகுதியை பிரிச்சி 3 தொகுதிக்கு மாவட்ட செயலாளர்னு போட முடிவெடுத்திருக்காங்களாம். அதில், 6 பேர் லிஸ்டில் போனதுல ஜெ.வால் பதவி போடப்பட்ட லட்சுமணன் பேரை ஓபிஎஸ், இபிஎஸ் டிக் செய்திருக்காங்களாம். ஆனால், உள்ளூர் அமைச்சர் அவருக்கு முட்டுக்கட்டை போடுறாராம்.

நானே மந்திரி, நானே ராஜா என்று கூறிவருவதால், அவர் மீது தலைமை அதிருப்தியில் இருக்காம். எல்லா மாவட்டமும், கட்சி ரீதியாக ரெண்டாக பிரிச்சிட்டாங்க.. இங்க மட்டும் ஒரே ஆள் இருக்கிறத ஏத்துக்க முடியாதென்று தலைமை தெளிவா சொல்லிடுச்சாம். இதனால் கடுப்பான அமைச்சர், முடிந்தளவிற்கு புதிய மாவட்ட செயலாளர் பதவிக்கு தடைபோட்டு பார்க்கிறார். அப்படியில்லைனா நான் கை காட்ற ஆளத்தான் போடனுமுன்னு கண்டிஷன் போட, தலைமைக்கும், லோக்கல் மினிஸ்டருக்கும் ஒரே லடாய்ல போயிட்டிருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறைக்குள் பறிமுதல் செய்த செல்போனை மூடி மறைக்க முயற்சி நடந்திட்டிருக்காமே..’’
‘‘வேலூர் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா தாராளமாக புழங்குகிறது.  இங்கு உயர்பதவியில் உள்ள 2 பெண்களுக்கு இடையே அதிகாரப்போட்டி நடந்து வருவதற்கு சமீபத்தில் நடந்த சம்பவமே சாட்சி என்கின்றனர். சமீபத்தில் செல்போன் சர்ச்சிங் டீமை சேர்ந்த காவலர்கள் சிறை கண்காணிப்பாளரால் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை சிறைத்துறை உயர்அதிகாரி தனது அதிகாரத்தால் மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு வந்துவிட்டார். ஊரடங்கு உத்தரவால், கைதிகளை சந்திக்க உறவினரும் வருவதில்லை.

ஆனால் சிறைக்குள் பணியாற்றும் சில காவலர்கள் கைதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, செல்போன், கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றனராம். இந்நிலையில், வேலூர் சிறையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 2 செல்போன், பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆனால் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வெளியே தெரியாமல் மூடி மறைக்க சிறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சிறைக்குள் செல்போன் கொண்டு வருவதில் கெடுபிடி அதிகமாக இருப்பதாக கூறி, கைதிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்கும் வகையில் செல்போன் பறிமுதல் நாடகம் நடத்தப்படுவதாக விவரம் அறிந்த சிறைக்காவலர்கள் கிசுகிசுக்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கொரோனா பலி தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது என்கிறார்களே.. உண்மைதானா..’’ என்று ஐயத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தென்காசி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானவர்கள் விவரம் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறதாம். தென்காசியில் பாதிப்பு 400ஐ எட்டியிருந்தாலும் இதுவரை 4 பேர் கொரோனாவிற்கு பலியாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கடையநல்லூரைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே கணக்கில் ஏற்றியுள்ளனர். ஏற்கனவே தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் பலியாகி விட, அவர்கள் இறந்த பின்னர் தான் பரிசோதனை முடிவுகள் வெளியானதாம்.

இனிமேல் பாசிட்டிவ் என்பதை வெளியே சொன்னால் இறப்பு கணக்கில் சேர்த்து விடுவார்கள் என்பதால் அப்படியே அரசு அதிகாரிகள் மூடி மறைத்து விட்டனராம். ஆனால் அந்த உடலை அடக்கம் செய்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளதே என்பது குறித்து அதிகாரிகள் சற்றும் சிந்திக்கவில்லையாம். கொரோனா சமூக பரவல் இல்லை என அரசு கூறுகிறது. ஆனால் இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஏன் சமூக பரவல் வராது என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்