SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகர்கோவிலில் கொரோனா தொற்றினால் முதியவர் பலி...! மனைவிக்கும் தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!!

2020-07-05@ 12:19:29

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொரோனா தொற்றினால் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முதியவர், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் வழியில், உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் பரவி கொரோனா தொற்று அனைவரையும் சூறையாடி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 இருப்பினும் மக்கள் அதனை ஏற்காத வகையில் பல இடங்களில் சுற்றி திரிகின்றனர். இதனால், அதிகளவு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் சாலிகிராமத்தை சேர்ந்த முதியவரும்(60) அவரது மனைவியும் நாகர்கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவரையும் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனை செல்லும் வழியிலேயே, திடீரென முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மனைவியை மட்டும் சிகிச்சைக்காக  நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்க்கு தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா உயிரிழப்பு சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்